தமிழ் என் தாய் மொழி- டுவிட்டரில் பதிலடி கொடுத்த இந்திய மகளிர் அணியின் தலைவி

Published By: Rajeeban

16 Oct, 2019 | 01:20 PM
image

இந்திய  மகளிர் அணியின் தலைவி மிதாலி ராஜிற்கு தமிழ் தெரியாது ஏனைய மொழிகள் மாத்திரம் தெரியும் என டுவிட்டரில் கேலி செய்தவர்களிற்கு அவர் தமிழில் பதில் அளித்துள்ளதுடன் தமிழ் என் தாய் மொழி என குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரை இந்திய மகளிர் அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மகளிர் கிரிக்கெட் உலகில் 20 வருடங்களை பூர்த்தி செய்த ஒரேயொரு வீராங்கனை என்ற சாதனையையும் மித்தாலி ராஜ் நிகழ்த்தியுள்ளார்.

மித்தாலி ராஜின் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.

சச்சின் டெண்டுல்கரின் இந்த டுவிட்டிற்கு பதிலளித்திருந்த மித்தாலி ராஜ் ஆங்கிலத்தில் நான் எனது வாழ்க்கை முழுவதும் உதாரணமாக கொண்ட நபர் ஒருவரால் பாரட்டுப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம் என தெரிவித்துள்ளார்.

மித்தாலி ராஜின் இந்த டுவிட்டிற்கு கருத்து தெரிவித்த பலர் அவரிற்கு தமிழ் தெரியாதா என கேள்வி எழுப்பினர்.

அவருக்கு தமிழ் தெரியாது,அவருக்கு ஆங்கிலம் தெரியாது,தெலுங்கு இந்தி தெரியும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மித்தாலி ராஜ் தமிழ் என் தாய்மொழி நான் நன்றாக தமிழ்பேசுவேன் தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியன் என்ற அடிப்படையில் நான் பெருமைப்படுகின்றேன் எனவும் மித்தலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35