மின்சாரம் தாக்கி இரு மாடுகள் பலி !

Published By: Daya

16 Oct, 2019 | 09:49 AM
image

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மின்சாரம் தாக்கி இரு மாடுகள்  உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. கண்முன்னே வளர்த்த மாடுகளைக் காப்பாற்றச் சென்ற உரிமையாளர் தப்பியுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை நேரம் முழங்காவில் பகுதியின் மன்னார் யாழ் வீதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி (ரான்ஸ்போமர்) யிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. குறித்த நேரம் அப்பகுதியில் மழையும் பெய்துகொண்டிருந்த நிலையில் குகுறித்த மாடுகள் இரண்டினையும் மின்சாரம் தாக்கியுள்ளது.

கண்முன்னே மாடுகள் போராடுவதை அவதானித்த உரிமையாளர் காப்பாற்ற முற்பட்டபோது அப்பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற பொலிஸார் அவரை பாதுகாத்துள்ளனர். மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகளின் பெறுமதி சுமார் 150,000 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்குத் தெரியப்படுத்தி 2 மணிநேரங்களின் பின்னரே அப்பகுதிக்கு வந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் டொன் பொஸ்கோ பாடசாலை காணப்படும் நிலையில் அப்பகுதியில் சிறார்கள் அதிகம் நடமாடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் மின்சாரசபையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40