5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கிய விவகாரம்: 16 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட

Published By: Vishnu

15 Oct, 2019 | 07:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்  முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவை 16 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி. இன்று பெயரிட்டது. 

வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சி.ஐ.டி. இவ்வாறு அவரை 16 ஆவது சந்தேக நபராக பெயரிட்டது.

இன்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைகளை இடையீட்டு மனுவூடாக சி.ஐ.டி.யால்  விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது. அதன்படி அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர்  நிசாந்த சில்வா,  வசந்த கரன்னாகொடவை இந்த விவகாரத்தில் 16 ஆவது சந்தேக நபராக  பெயரிட கோரினார். 

அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பிரகாரம்,  அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாரும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோரினார்.

சந்தேக நபராக வசந்த கரன்னாகொடவை பெயரிட அனுமதியளித்த நீதிவான்,  அவரை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியொருவர்‍ ஊடாக  மன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08