ரெடிகுலோபதி  என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

15 Oct, 2019 | 07:05 PM
image

இன்றைய திகதியில் மூன்று மாத குழந்தைகள் முதல் முதுமையில் உள்ளவர்கள் வரை அனைவரும் கைபேசி திரை, மடிக்கணினி திரை, கணினி திரை, தொலைக்காட்சி திரை, டிஜிற்றல் திரை என பல திரைகளை கழுத்தை குனிந்துகொண்டு அல்லது கழுத்தை அதன் இயல்பான நிலையில் வைத்து பார்க்காமல் எமக்கு சௌகரியமான நிலையில் வைத்துக்கொண்டு பார்ப்பதால் தண்டுவடமும், கழுத்துப்பகுதியும் பாதிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக கழுத்தில் உள்ள சவ்வு மற்றும் எலும்பு தண்டுவட நரம்பும், தண்டுவடத்திலிருந்து வரும் பக்க நரம்புகளும் இயல்புக்கு மாறான அழுத்தம் பெறுவதாலும், அழுத்தப்படுவதாலும் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. குறிப்பாக கழுத்து வலி. கழுத்து பிடிப்பு சுளுக்கு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சிலருக்கு சில தருணங்களில் இத்தகைய பாதிப்பு மோசமடைந்து கழுத்தை சிறிய அளவேனும் திருப்ப முடியாத நிலை ஏற்படும். வேறு சிலருக்கு கழுத்திலிருந்து கைகளுக்கு மின்சாரம் பாய்ச்சுவது போல் வலி பரவும். இன்னும் சிலருக்கு கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம். அத்துடன் கைகளின் வலிமை குறையத் தொடங்கும். இத்தகைய நிலைப்பாட்டிற்கு ரெடிகுலோபதி என்று மருத்துவத் துறை குறிப்பிடுகிறது.

அதே போல சிலருக்கு மயோபதி என்ற பாதிப்பும் ஏற்படும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் கை அல்லது கால்களில் பாதிப்பு ஏற்பட்டு, கைகளும், கால்களும் விறைத்துக் கொள்ளும் அல்லது மரத்துப்போகும். சிலருக்கு இதன் காரணமாக நடக்க முடியாமல் கூட போகலாம். வேறு சிலருக்கு கைகளிலும், கால்களிலும் உணர்ச்சிக் குறைவு ஏற்படக் கூடும்.

இதனை உரிய காலகட்டத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கலை உண்டாக்கும். அதற்குப் பின்னரும் நீங்கள் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் கழுத்துக்குக் கீழ் திடீரென்று உணர்விழந்த நிலை ஏற்படக்கூடும்.இத்தகைய பாதிப்பு தற்போது 30 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொண்டு, நிவாரணமும், குணமும் அடையலாம். இதற்கு தற்போது பெயின் மேனேஜ்மெண்ட் என்ற நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது.

டொக்டர் விக்னேஷ்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32