கேகாலையில் மண்சரிவு அபாயம் : 1315 பேர் வெளியேற்றம்

Published By: Robert

22 May, 2016 | 12:14 PM
image

தெஹியோவிற்ற டெனிஸ்வர்த் தோட்டம், புளத்கோபிடிய களுப்பான தோட்டம், அரநாயக்க சிரிபுர பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினை தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் பல தோட்டங்களிலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்த வகையில் கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேச செலயகத்திற்கு உட்பட்ட அலுகொல்ல தோட்டம், கிரிபோருவ தோட்டம், லெவன்ட் கீழ்பிரிவு, லெவண்ட் மேல்பிரிவு, மற்றும் பூனுகல தோட்டமும், புளத்கோபிடிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட களுப்பான தோட்டமும், கேகாலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டாளை பிந்தெனிய தோட்டமும், ருவன்வெல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முள்ளுகாமம் தோட்டமும், தெஹியோவிற்ற பிரதேச செயகத்திற்கு உட்பட்ட அய்லா இறப்பர் தோட்டமும், யோகம, பட்டாங்கல, டெனிஸ்வர்த், ஈரியகொல்ல ஆகிய தோட்டங்களும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தோட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அவர்களை தற்பொழுது பாதுகாப்பாக பாடசாலைகளிலும் கோயில்களிலும் சிறுவர் முள்பள்ளி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, அலுகொல்ல தோட்டத்தில் லயக்குடியிருப்பு பின்னால் உள்ள பெரிய மலைமேடு சரிவதற்கான அறிகுறி இருப்பதாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக 3 லயக்குடியிருப்பை சேர்ந்த 178 பேர் அலுகொல்ல தமிழ் வித்தியாலத்திலும் சிறுவர் முள்பள்ளியிலும், பூனுகல தோட்டத்தில் மண்வரிவு ஏற்பட்டபொழுதும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, இருப்பினும் அங்கு 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பூனுகல தமிழ் வித்தியாலயத்திலும், லெவண்ட் கீழ்ப்பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் லெவண்ட் தமிழ் வித்தியாலயத்திலும், லெவண்ட் மேல்பிரிவில் 20 குடும்பத்தை சேர்ந்த 62 பேர் வெலிலேல்தென்ன சிங்கள பாடசாலையிலும், புளத்கோபிடிய களுப்பான தோட்டத்தில் தொடரும் மண்சரிவால் அங்கு 60 குடும்பத்தைச் சேர்ந்த 330 பேர் லக்கல சிங்கள பாடசாலையிலும் கிரிபொருவ தோட்டத்தில் 12 குடும்பத்தை சேர்ந்த 42 பேர் பன்னல சிங்கள பாடசாலையிலும், கேகாலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டாளை பிந்தெனிய தோட்டத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 32 பேரும், ருவன்வெல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  முள்ளுகாமம் தோட்டத்தில் 20 குடும்பத்தை சேர்ந்த 76பேர் ருவன்வெல்ல கலைவாணி தமிழ் வித்தியாலத்திலும், தெஹியொவிற்ற பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அய்யா இறப்பர் டிவிசனில் 20 குடும்பத்தை சேர்ந்த 76பேர் அய்லா தமிழ் வித்தியாலயத்திலும், ஈரியகொல்;ல தோட்டத்தில் 12 குடும்பத்தை சேர்ந்த 58 பேர் அத்தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்திலும், யோகமயில் 29பேரும் மற்றும் பட்டாங்கல தோட்டத்தில் 40பேரும் யோகம தமிழ் வித்தியாலயத்திலும் டெனிஸ்வர்த் தோட்டத்தில் 68 குடும்பத்தை சேர்ந்த 350பேர் தோட்ட நிர்வாகிகளின் இல்லங்களிலும்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை தோட்ட நிர்வாகத்தின் ஊடாகவும் பிரதேச செலயகத்தின் ஊடாகவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து சப்ரகமவ மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் மேற்கொண்டு வருகின்றார். எனவே தோட்ட மக்கள் அபாயத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. உபகாரிகள் மேற்படி தோட்டங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளமுடியும்.

(அவிசாவளை நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27