சங்கிலியால் பிணைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் மீண்டும் நைஜீரியாவில் மீட்பு-வீடியோ இணைப்பு

15 Oct, 2019 | 04:40 PM
image

நைஜீரியாவில் இஸ்லாமிய பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 67 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடுனா மாநிலத்தில் கடந்த மாதம் இவ்வாறு மோசமானநிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300ற்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே நைஜீரியாவின் வடபகுதியில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

7 முதல் 40 வயதுடையவர்களே மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞர்களும் ஆண்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர் அவர்கள் மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரு ஆசிரியர்களும் அதிபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இஸ்லாமிய பாடசாலையில் காணப்பட்ட பலர் காவல்துறையினர் அங்கு செல்வதற்கு முதல் தப்பியோடிவிட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் தங்கள் கைவிலங்குகளுடன் தப்பிச்சென்றுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தாங்கள் உணவின்றி வாடுவதுடன் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சீற்றமடைந்தனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல தசாப்தங்களாக இயங்கிவந்த இந்த பாடசாலையில் குரான் கற்பிக்கப்பட்டதாகவும் நடத்தை பிரச்சினைகள் உள்ளவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07