உலகில் விலையுயர்ந்த பாதணி அறிமுகம்

Published By: Daya

16 Oct, 2019 | 09:59 AM
image

டுபாய் புர்ஜ் கலிபா கட்டடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க பாதணி உலகின் விலை உயர்ந்த பாதணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

குறித்த தங்க பாதணியை டுபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய பாதணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 துபாயில் வசித்து வரும் இத்தாலியைச் சேர்ந்த ஆண்டோனியோ விட்ரி என்பவர் வடிவமைத்துள்ளார்.  குறித்த பாதணி 24 கரட் தங்கம், 30 கரட் வைரங்கள் மற்றும் கடந்த  1579 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதன் குதிகால் பகுதியானது டுபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 இலட்சம் அமெரிக்க டொலர் ஆகும்.

ஏற்கெனவே ஒரு கோடியே 55 இலட்சம் அமெரிக்க டொலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட பாதணி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது டுபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்கச் பாதணி, அதனை முறியடித்து உலகிலேயே அதிக விலையுயர்ந்த பாதணியாக திகழ்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right