"அலு­வ­லக பதி­வாளர் போன்று ஆடை அணிந்துள்ள மக்­களின் சேவகனிற்கா? குடும்ப ஆட்சியமைக்க துடிப்பவர்களுக்கா உங்கள் வாக்கு?: ஹரீன்

Published By: J.G.Stephan

15 Oct, 2019 | 12:21 PM
image

(நா.தனுஜா)

பழைய இறப்பர் செருப்பும், அரச அலு­வ­லக பதி­வாளர் போன்ற ஆடையும் அணிந்­தி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­சவிற்கு எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்று சிலர் பேஸ்­புக்கில் விமர்­சிக்­கின்­றார்கள். ஆனால் இவற்­றி­லி­ருந்தே சஜித் பிரே­மதாச பொது­ மக்­களின் சேவை­யாளன் என்பது தெளி­வா­கின்­றது.

அத்­த­கைய ஒரு­வ­ருக்கு இம்­ முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கப் போகின்­றீர்­களா? அல்­லது நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும், பிர­த­ம­ரா­கவும் ராஜ­பக் ஷவே செயற்­படும் வகையில் ஒரு குடும்­பத்­திடம் நாட்டைக் கைய­ளிக்கப் போகின்­றீர்­களா? என்று தொலைத்­தொ­டர்பு, டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு வச­திகள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

ஹப்­புத்­தளை நகரில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் மக்கள் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

இப்­போது தான் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த எமது மனங்­களில் அர­சியல் ரீதியில் ஒரு­வித தைரியம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் சுமார் 25 வரு­டங்களுக்கும் அதிக காலத்தின் பின் னர் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்­கான பய­ணத்தை நாங்கள் ஆரம்­பித்­தி­ருக்­கின் றோம்.

நாம் முன்­னின்று போராடி ஜனா­தி­ப­தி­யாக்­கிய ஒருவர் வேறு ஒரு கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்ட போது ஐக்­கிய தேசியக் கட்சி கைவி­டப்­பட்­டது. அத்­த­கை­ய­தொரு தரு­ணத்தில் கடந்த காலத்தில் நாம் மிகவும் நேசித்த ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் மகன் சஜித் பிரே­ம­தாச நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகும் போராட்­டத்தில் இறங்­கி­யி­ருக்­கின்றார் என்­பதை மிகவும் பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கின்றோம்.

சிலர் பேஸ்புக் பக்­கங்­களில் சஜித் பிரே­ம­தா­சவை விமர்­சிக்­கின்­றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலு­வ­லக பதி­வாளர் போன்ற ஆடையும் அணிந்­தி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்று அவர்கள் கேட்­கின்­றார்கள். ஆனால் இவற்­றி­லி­ருந்தே சஜித் பிரே­ம­தாச பொது­மக்­களின் சேவை­யாளன் என்­பது தெளி­வா­கின்­றது. அவ­ருக்கு மாளிகை போன்ற இல்­லங்­க­ளுக்கோ அல்­லது வெளி­நாட் டுக் கல்­விக்கோ எவ்­வித குறையும் இருக்­க­வில்லை. ஆனால் சாதா­ரண மக்கள் மத்­தியில் சென்று சேவை­யாற்ற வேண்டும் என்­பதே அவ­ரு­டைய எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் அவரை எதிர்த் துக் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்ற கோத்தபாய (அச்சம்) என்ற மனிதர் அர­சி­யலில் பிர­தே­ச­ சபைத் தேர்­தலில் கூட கள­மி­றங்­கி­ய­தில்லை. குறைந்­த­பட்சம் பிர­தே­ச­ சபை நிர்­வாகம் தொடர்பில் கூட அறி­யாத நப­ரொ­ரு­வரால் இந்த நாட்டைச் சீர­மைக்க முடியும் என்று கரு­து­கின்­றீர்­களா? ஆனால் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பௌத்த, இந்து, இஸ்­லா­மிய, கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்­த­வர்கள் அனை­வரும் ஒன்­றுதான்.

அவரைப் பொறுத்­த­வரை இன, மத வேறு­பா­டுகள் எவையும் ஒரு பொருட்­டல்ல. சஜித் பிரே­ம­தாச அவ­ரு­டைய தந்­தை­யாரின் கொள்­கை­க­ளையும், செயற்­பா­டு­க­ளையும் பின்­பற்றி, அதே பாதையில் பய­ணிக்­கின்ற ஒரு­வ­ராவார். எனவே தனி­ யொரு குடும்­பத்­திடம் நாட்டைக் கைய ­ளிக்கப் போகின்­றீர்­களா அல்­லது மக்­க­ளு டன் நின்று சேவை­யாற்றும் சஜித்திடம் நாட்டின் பொறுப்பை வழங்­கப்­போ­கின்­றீர்­களா என்று மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். நாட்டின் பிர­த­மரும், ஜனா­தி­ ப­தியும் ராஜ­ப­க் ஷ­வா­கவே இருப்­பதை விரும்­பு­கின்­றீர்­களா?

அர­சி­யலைப் பொறுத்­த­வரை நாடு குறித்த ஒரு தூர­நோக்கு சிந்­தனை இருக்க வேண்டும். இந்த நாட்டில் கல்­வி­ கற்று, இங்­கேயே வேலை­வாய்ப்பைப் பெறக்­

கூ­டி­ய­வா­றாக இருக்க வேண்டும். அத்­த­கைய திட்­ட­மிடல் அற்ற ஒரு­வ­ரிடம் நாட்டைக் கைய­ளித்தால் எதிர்­வரும் 10 வரு­டங்­களில் நாமும், எமது எதிர்கால சந்ததியும் பாதிக்கப்பட நேரும். கடந்த காலத்தில் எம்மிடம் குறைபாடுகள் இருந்திருப்பின் அதற்கான நடவடிக்கை களை நீங்கள் மேற்கொள்ளலாம். ஆனால் இன்னும் 35 நாட்களில் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பைக் கைவிட்டு விட வேண்டாம். 

அதே போன்று தற்போது பலரும் எல் பிட்டி தேர்தல் தொடர்பில் பேசி வரு கின்றார்கள். நாட்டை நிர்வகிக்கும் தீர் மானம் எல்பிட்டி தேர்தல் ஊடாக மேற் கொள்ளப்படுவதல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13