மீண்டும் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்கு முனை­வது மக்­க­ளுக்கு இழைக்கும் துரோ­க­மாகும் - தினேஷ் குண­வர்­தன 

Published By: Jayanthy

15 Oct, 2019 | 12:01 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

தேசிய  பாது­காப்­பினை அலட்­சி­யப்­ப­டுத்தி 250 இற்கும் அதி­க­மான உயிர்­களை கொன்ற  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் வேண்­டுமா?  அல்­லது 30வருட கால சிவில் யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்து தேசிய  பாது­காப்­பினை  பலப்­ப­டுத்­திய  எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வின் அர­சாங்கம் வேண்­டுமா? என்­பதை நாட்டு மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார்.

கட­வத்த நகரில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத் ­தாக்­கு­தலை ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங் கம் தற்­போது முழு­மை­யாக மறந்து விட்­டது. தொடர் குண்­டுத்­தாக்­குதல் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­களில் நடத்­தப்­படும் என்று  இந்­திய புல­னாய்வு பிரிவு தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு அறி­வித்தும் எவ்­வித நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அர­சாங்­கத்தின் அலட்­சியப் போக்­கினால் 250இற்கும் மேலான உயிர்கள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த உயி­ரி­ழப்­புக்கள் அர­சாங்­கத்­திற்கு ஒரு சாதா­ரண விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.  குண்­டுத்­தாக்­கு­தலை தொடர்ந்து  எழுந்த பல  கேள்­வி­க­ளுக்கு இது­வ­ரையில் விடை கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்தி மக்­களின் வாழ்க்கைத்தரத்­தினை முன்­னேற்­று­வ­தற்­கா­கவே அர­சாங்கம் மக்­களால் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வி­ரண்டு விட­யங்­க­ளிலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. ஆகவே மீண்டும் அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்கு முனை­வது மக்­க­ளுக்கு  இழைக்கும் துரோ­க­மாகும்.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஒட்­டு­மொத்த மக்­களின் எதிர்­கா­லத்­தையும் தீர்­மா­னிக்கும் தின­மாக உள்­ளது. தேசிய பாது­காப்­பினை அர­சியல் தேவை­க­ளுக்­காக பல­வீ­னப்­ப­டுத்­திய  ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்சி வேண்­டுமா, அல்­லது 30வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து  தேசிய பாதுகாப்பை பலப்படுத்திய  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜ­ப­க்ஷ­வின் அரசாங்கம் வேண்டுமா என்பதை கடந்த நான்கரை வருட கால அரச நிர் வாகத்துடன் ஒப்பிட்டு தீர்மானிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51