சியம்பலாண்டுவ - தெமட்டஎல்ல பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த நால்வர் இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

சியம்பலாண்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.