சர்வதேசம் தலையிடாது - பசில் நம்பிக்கை

Published By: Digital Desk 3

15 Oct, 2019 | 11:34 AM
image

இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலை­யிட முயற்­சிக்க மாட்­டார்கள். நெறி­மு­றைப்­படி அது அப்­ப­டித்தான் இருக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவின் ‘ தி ஹிந்து’ பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­துள்ள அவர்,

” 2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்­தலில் இந்­தியா அல்­லது வேறு எந்த நாடும் அவர்­களை (எதிர்க்­கட்சி கூட்­ட­ணியை) ஆத­ரித்­தன என்­ப­தற்கு தனிப்­பட்ட முறையில் என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்­தது என்­பதை இப்­போது நாங்கள் நன்­றாக புரிந்து கொண்டோம். முன்­ன­தாக எங்கள் அர­சாங்­கத்தை மாற்ற யாரும் செயற்­பட்­டி­ருந்தால் நாங்கள் இப்­போது நிலை­மையை சரி­செய்­துள்ளோம்.

இந்­தியா எங்கள் முத­லிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அர­சியல் மற்றும் பாது­காப்பு விஷ­யங்­களில் நாங்கள் எப்­போதும் இந்­தி­யா­வுடன் செல்ல வேண்டும், ஆனால் பொரு­ளா­தார மற்றும் பிற விஷ­யங்­களில் நீங்கள் சீனாவை மறக்க முடி­யாது .

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது.

தேர்­தலில் தமி­ழர்­களின் வாக்­குகள் மிக முக்­கி­ய­மா­னவை . கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பதை தமி­ழர்­களால் மறக்க முடி­யாது. ஆனால் இரு சமூ­கத்­தி­னரும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் மன்­னிக்க வேண்டும். நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்­கட்டும். எமது கட்சி அதி­க­பட்ச அதி­காரப் பகிர்­வுக்கு உறு­தி­பூண்­டுள்­ளது. எங்கள் வேட்­பாளர் அல்­லது ஜனா­தி­பதி யார் என்­பது முக்­கி­ய­மல்ல, எங்கள் தலைவர் [மஹிந்த ராஜ­பக்ஷ] அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் [பிரதமராக]. எனவே, இந்த ஏற்பாடு எங்களுக்கு நன்றாக பொருந்துகிறது. அவர் எங்கள் தலைவர், அவர் நம் நாட்டின்  தலைவர் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20