விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்த நபருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு

Published By: Digital Desk 4

14 Oct, 2019 | 05:52 PM
image

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி  பல நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு  19 இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் மற்றும் 12 இலட்சம் ரூபாவை பெற்று  பாரிய நிதி மோசடி செய்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பவருக்கு எதிராக விசேட நிதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில்   வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு எதிராக  சில தினங்களுக்கு முன்னர் பகிரங்க பிடிவிறாந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள  தனது பிள்ளைகளை சந்தேக நபர் பார்வையிடுவதற்காக  இலங்கை   பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதாக  கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து சந்தேக நபரை  விசேட  நிதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து   கல்முனை நீதிவான் நீதிபதி ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை(14) ஆஜர் படுத்தினர்.

இதன் போது சந்தேகநபர் பல்வேறு நபர்களிடம் எந்தவித   நிதியை மோசடியும்  செய்யவில்லை என  கோரி அவரது  சட்டத்தரணிகள் நீதிவானிடம் பிணை விண்ணம் கோரி நின்றனர்.

எனினும் குறித்த  நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  இதனால் அவரது பிணை விண்ணப்பத்தை இரத்து செய்யுமாறு பொலிஸ் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து   குறித்த வழக்கை விசாரணைக்குட்படுத்திய பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை  நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.ரிஸ்வான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58