தமி­ழரின் அர­சியல் தீர்­வுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் ; த.தே.கூவுடன் விரைவில் பேச்சு - மஹிந்த

Published By: R. Kalaichelvan

14 Oct, 2019 | 01:08 PM
image

தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வுகாண தயா­ராக உள்ளோம். எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்  இந்த விட­யத்­துக்கு முக்கி­யத்­துவம் அளிக்­கப்­படும்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் விரைவில் பேச்­சு­வார்த்தை  நடத்த எதிர்­பார்த்­துள்ளேன். எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­டப்­பட்ட பின்னர் இந்த பேச்­சு­வார்த்தை இடம்­பெறும் என்று எதிர்க்­கட்சி தலை­வரும் பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி  தேர்­தலில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசின் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் எமக்கு  ஆத­ரவு வழங்க முன்­வ­ருவார். 99.9 வீதம் அந்த நம்­பிக்கை எனக்கு உள்­ளது. மலை­ய­கத்தில் முர­ளி­தரன் குறித்தும் மக்கள் மத்­தியில் ஆர்வம் ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினர்.

தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று தனது உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறி­ய­தா­வது. ஜனா­தி­பதி தேர்தல் முடி­வு­களை கட்­டியம் கூறும் வகையில் எல்­பிட்­டிய பிர­தேச சபைக்­கான தேர்தல் முடி­வுகள் அமைந்­துள்­ளன. சஜித் பிரே­ம­தாச வேட்­பு­மனுத் தாக்கல் செய்த பின்னர் முதல் முத­லாக அங்கு சென்று பிர­சாரக் கூட்­டத்தை நடத்­தி­யி­ருந்தார். எல்­பி­டிய தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமை­யவே ஜனா­தி­பதி தேர்தல் முடிவும் வர­வுள்­ளது.

தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண நாம் நட­வ­டிக்கை எடுப்போம். இவ்­வி­டயம் தொடர்பில் எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்  முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும்.  நாட்டில் அர­சியல் பிரச்­சி­னையை தவிர ஏனைய பிரச்­சி­னைகள் சகல மக்­க­ளுக்கும் பொது­வா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. விவ­சா­யி­களின் பிரச்­சினை, பட்­ட­தா­ரி­களின் பிரச்­சினை உட்­பட அணைத்து பிரச்­சி­னை­க­ளையும் எல்­லோ­ருக்கும் பொது­வா­ன­தாக உள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம்  வீழ்ச்சி அடைந்­துள்­ளமை சக­ல­ருக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஆனால் அர­சியல் பிரச்­சினை என்­பது தமிழ் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. அதற்கு நாம் தீர்வு வழங்க வேண்டும். அதற்­கான யோசனை நிச்­சயம் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில்  இடம்­பெறும்.

தற்­போது பம்பாய் வெங்­காயம் 350 ரூபாவை எட்­டி­யுள்­ளது. அண்­மையில் தமிழ் வர்த்­த­கர்கள் நால்வர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டனர். இவ்­வாறு பொரு­ளா­தர ரீதியில் பெரும் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. இது குறித்து பேசு­வ­தற்கு யாரு­மில்லை.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் இன்­னமும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை. நாம் எமது கொள்கைத் திட்­டங்­களை வெளி­யிட்ட பின்­னரே அவர்­க­ளுடன் பேசு­வ­தற்கு எண்­ணி­யுள்ளேன். 18 ஆம் திகதி எமது தேர்தல் விஞ்­ஞா­பனம்  வெளி­யி­டப்­படும். அதன் பின்னர் அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன்.

தொண்­டமான் ஆத­ரவு

மலை­யக அர­சி­யலை பொறுத்­த­வ­ரையில் ஜனா­தி­பதி தேர்­தலில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் எமக்கு ஆத­ர­வ­ளிப்பார். 99.9 வீதம் அந்த நம்­பிக்கை எனக்கு உள்­ளது. மலை­ய­கத்தை பொறுத்த வரையில் தற்­போது முத்­தையா முர­ளி­த­ர­னுக்கு நல்ல கேள்வி எழுந்­துள்­ளது. அவரை அங்கு பேசு­வ­தற்கு அனுப்­பு­மாறு என்­னிடம் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

புதிய அர­சியல் யாப்பு

புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் நாம் ஆட்சி அமைத்­ததும் சிந்­திக்க முடியும். 19 ஆவது திருத்த சட்­டத்தின் கீழ் அதி­காரம் இரு தலை­மை­க­ளிடம் பகி­ரப்­பட்­டுள்­ளன. ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அதி­கா­ரங்கள் இருக்க முடி­யாது. யாரா­வது ஒரு தரப்­பிடம் அதி­காரம் இருக்க வேண்டும். இதற்­கேற்ற வகையில் நாம் 19 ஆம் திருத்­தத்தில் மாற்­றங்­களை கொண்­டு­வ­ருவோம். இவை அனைத்­திற்கும் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை தேவை­யாக உள்­ளது.

அதி­காரம் குறித்து தற்­போது பேசு­ப­வர்கள் மாகா­ண­சபை தேர்­தல்­களை நடத்­து­மாறு கோரு­வ­தில்லை. ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்­தல்­களை  நடத்­தாது ஒத்­தி­வைத்­துள்ளார். சர்­வா­தி­காரி  என குற்றம் சாட்­டப்­படும் நான் சகல தேர்­தல்­க­ளையும் நடத்­தி­யி­ருந்தேன். நான் தோல்­வி­ய­டைவேன் என்று தெரிந்தும் கூட தேர்­தல்­களை நடத்­தி­யி­ருந்தேன். மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலே நடை­பெ­றாத நிலையில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேசு­வதில் பய­னில்லை. இந்த செயற்­பாட்­டிற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்கி வந்­தது.

தற்­போது ரிஷாத் பதி­யு­தீனை எடுத்­துப்­பா­ருங்கள். அவர் தனது மக்­களின் நலன் குறித்தும் நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை பெற்­றுக்­கொண்­டுள்ளார். அர­சாங்­கத்­துடன் இணைந்து இந்த செயற்பாடுகளை  மேற்கொண்டார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அவ்வாறு செயற்படவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அமைச்சுக்கள் வழங்குவது குறித்தோ அல்லது பதவிகள் வழங்குவது குறித்தோ எந்தவித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. வடக்கு கிழக்கில் பிரசாரக் கூட்டங்களை நாங்கள் நடத்தவுள்ளோம். பசில் ராஜபக் ஷ இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். நாமல் ராஜபக்ஷ நாளை வடக்குக்கு சென்று ஐந்து தினங்கள் தங்கியிருக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53