நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் ராஜபக்ஷவாக இருப்பதை விரும்புகின்றீர்களா? - ஹரீன் கேள்வி

Published By: Vishnu

14 Oct, 2019 | 01:03 PM
image

(நா.தனுஜா)

தனியொரு குடும்பத்திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்களா அல்லது மக்களுடன் நின்று சேவையாற்றும் சஜித்திடம் நாட்டின் பொறுப்பை வழங்கப்போகின்றீர்களா என்று தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் ராஜபக்ஷவாகவே இருப்பதை விரும்புகின்றீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹப்புத்தளை நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

சிலர் பேஸ்புக் பக்கங்களில் சஜித் பிரேமதாசவை விமர்சிக்கின்றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலுவலக பதிவாளர் போன்ற ஆடையும் அணிந்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு எவ்வாறு வாக்களிப்பது என்று அவர்கள் கேட்கின்றார்கள். ஆனால் இவற்றிலிருந்தே சஜித் பிரேமதாச பொதுமக்களின் சேவையாளன் என்பது தெளிவாகின்றது. அவருக்கு மாளிகை போன்ற இல்லங்களுக்கோ அல்லது வெளிநாட்டுக் கல்விக்கோ எவ்வித குறையும் இருக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் சென்று சேவையாற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துக் களமிறங்கியிருக்கின்ற கோத்தா'பய' (அச்சம்) என்ற மனிதர் அரசியலில் பிரதேசசபைத் தேர்தலில் கூட களமிறங்கியதில்லை. குறைந்தபட்சம் பிரதேசசபை நிர்வாகம் தொடர்பில் கூட அறியாத நபரொருவரால் இந்த நாட்டை சீரமைக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?

ஆனால் சஜித் பிரேமதாஸவிற்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுதான். அவரைப் பொறுத்தவரை இன,மத வேறுபாடுகள் எவையும் ஒரு பொருட்டல்ல. சஜித் பிரேமதாஸ அவருடைய தந்தையாரின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் பின்பற்றி, அதே பாதையில் பயணிக்கின்ற ஒருவராவார் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59