இலங்கை ரோல் பந்து சம்மேளனத்தின் தேசிய விளையாட்டுப் போட்டி

Published By: Jayanthy

14 Oct, 2019 | 01:41 PM
image

இலங்கை ரோல் பந்து சம்மேளனத்தின் நான்காவது வருடாந்த தேசிய விளையாட்டு போட்டிகள் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ரோல் பந்து மைதானத்தில்  நேற்யை தினம் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக ரோல் பந்து சம்மேளனத்தின் தலைவர் திரு.வி.ஜனகன், மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதான கணக்காளர்  ஆ.செல்வரெட்ணம் , புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் அகஸ்ரின் , டெக்னோ மீடியா கனடாவின் இலங்கை இணைப்பாளர்  தங்கேஸ்வரன்  ATIS இன் இணைப்பாளர் மோகன்குரூஸ், சப்ரகமுவ பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஜேகனேந்திரன் , மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் லெம்பேட், மன்னார் மாவட்ட விளையாட்டு இணைப்பாளர் ஜஸ்மின், இலங்கை ரோல் பந்து ஸ்தாபகரும் இலங்கை ரோல்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பா.தவேந்திரன் , இலங்கை ரோல்பந்து சம்மேளனத்தின் உபதலைவர் நெவில் பிரேந்திரா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட ரோல்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இப் போட்டியில் பத்திற்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ் அணிகளில் 14 வயதின் கீழ் 17 வயதின் கீழ் 17 வயதின் மேல் ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் ஆண், பெண் இருபால் அணியினரும் கலந்து கொண்டனர்.

காலை முதல் மாலை வரை இடம்பெற்ற போட்டிகளில்

17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை கொழும்பு மாவட்ட அணியும் 2 ஆம் இடத்தை மன்னார் மாவட்ட அணியும் 3 ஆம் இடத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.

17 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் முதலாமிடத்தை மன்னார் மாவட்ட அணியும் 2 ஆம் இடத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.

17 வயதிற்கு கீழ் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை மன்னார் மாவட்ட அணியும் 2 ஆம் இடத்தை யாழ்ப்பாண மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.

14 வயதிற்கு கீழ் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை யாழ்.மாவட்ட அணியும் 2 ஆம் இடத்தை மன்னார் மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22