(தி.சோபிதன்)
4 நாட்களாக காணாமற்போயிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன், இணுவில் சின்னப் பள்ளிக்கூடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் நடமாடிய வேளை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
மாணவன் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ். நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்ததாக அவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உடுவிலை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவன் வீட்டிலிருந்து கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை காலை, மருந்து எடுப்பதாகக் கூறிச் சென்ற நிலையில் இரவு வரை வீடு திரும்பாததால் மறுநாள் வெள்ளிக்கிழமை தாயாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
உடுவில் அம்பலவாணர் வீதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஜனுக்சன் (வயது -16) என்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயிலும் மாணவனே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
இந் நிலையில் 4 நாட்களின் பின்னர் நேற்றுக்காலை 10 மணியளவில் இணுவில் சின்னப் பள்ளிக்கூடம் பகுதியில் மாணவன் நடமாடிய வேளை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணைகளுக்காக அவர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தான் கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாணம் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக குறிப்பிடும் மாணவன், யார் அழைத்துச் சென்றார்கள் அல்லது யாருடன் தங்கியிருந்தார் உள்ளிட்ட மேலதிக தகவல்களை தெரிவிக்கிறார் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM