ஜனாதிபதி மைத்­தி­ரி­யின் செயற்பாட்டை வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது: புத்ததாஸ

Published By: J.G.Stephan

14 Oct, 2019 | 11:54 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை  பல­வீ­னப்­ப­டுத்­தினார் என்­பதை வர­லாற்றில் இருந்து அழிக்க முடி­யாது. ஸ்ரீலங்கா சுதந்­திர ஜன­நா­யக முன்­னணி என்ற புது­வ­ழியில் இழந்த அர­சியல் செல்­வாக்கை மீண்டும் கைப்­பற்­றுவோம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் தலைவர் ஜி.எச். புத்­த­தாஸ தெரி­வித்தார்.

 ராஜ­கி­ரி­யவில் உள்ள சுதந்­திரக் கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் காரி­யா­ல­யத்தில்  சனிக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ராக உரு­வாக்­கப்­பட்ட  பொது­ஜன பெர­மு­ன­வுடன் இன்று  சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் கை­கோர்த்­துள்­ளமை  கவ­லைக்­கு­ரி­யது.கட்­சியின் கொள்­கை­யை ஒரு­போதும் விட்டுக் கொடுக்­க­மாட்டோம் என்று கருத்­து­ரைத்­த­வர்கள் இன்று  எதி­ர­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில்  கலந்து கொண்டு ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு  ஆத­ரவு கோரு­வது வெட்கித் தலை­குனிய வேண்­டிய செயற்­பா­டா­கவே காணப்­ப­டு­கின்­றது.

தங்­களின் எதிர்­கால அர­சியல் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­படும் என்று கரு­தியே சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் கட்­சிக்கு துரோ­க­மி­ழைத்­துள்­ளார்கள். ஒரு சிலர்  பொது­ஜன பெர­மு­ன­வுடன்  இணைந்­த­மை­யினால் சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் பொது­ஜன பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்­கு­வார்கள் என்று கருத முடி­யாது. 

இடம்பெற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் சுதந்­திரக் கட்­சியின் அடி­மட்ட உறுப்­பி­னர்கள் கட்­சிக்கு துரோ­க­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு தகுந்த பாடத்தை புகட்­டு­வார்கள். வர­லாற்று பின்­ன­ணியை  கொண்­டுள்ள சுதந்­திரக் கட்­சியை பாது­காக்க வேண்­டிய பொறுப்பு கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்கு உண்டு.

ஆகவே அனை­வரும் ஒன்­றி­ணைந்து மீண்டும் கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுத்­துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்­திர ஜன­நா­யக முன்­ன­ணியின் உத்­தி­யோ­க­பூர்வ செயற்­பா­டுகள் வெகு­வி­ரைவில் முன்­னெ­டுக்­கப்­படும்.

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தினார் என்­பதை வர­லாற்றிலிருந்து ஒரு­போதும் இல்­லா­தொ­ழிக்க முடி­யாது.  கட்­சிக்கு துரோ­க­மி­ழைத்­த­வர்கள் அனை­வ­ருக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்­டு­வார்கள்  என்றார்.  

சுதந்­திரக் கட்­சியை பாது­காக்கும் அமைப்பின்  செய­லாளர் ரஜித கொடித்­து­வக்கு  குறிப்­பி­டு­கையில்,

  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கொண்­டுள்­ளமை தொடர்பில் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  இது­வ­ரையில் எவ்­வி­த­மான  கருத்­தி­னையும் தெரி­விக்­க­வில்லை. விருப்­ப­மா­ன­வர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்துகொள்­ளுங்கள் என்று அவர் குறிப்­பிட்­ட­மை­யினை தொடர்ந்தே இரு தரப்­பிற்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

பொது­ஜன பெர­மு­ன­வுடன் சுதந்­திரக் கட்­சியை இணைக்க வேண்டாம்  என்று சுதந்­திரக் கட்­சியின்  181 தொகுதி அமைப்­பா­ளர்­களில் இரு­வரை தவிர்த்து ஏனையோர் அனை­வரும் குறிப்­பிட்டு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.  இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து ஒரு தீர்வினை எடுப்பதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார். 

நாடு தழுவிய ரீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து  கட்சியை  பலப்படுத்தி இழந்த அரசியல் செல்வாக்கினை மீண்டும் பெறுவோம். பொதுஜன பெரமுனவை வீழ்த்தி  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08