சிவா­ஜி­லிங்­கத்தை தேர்­தலில் இருந்து வில­கு­மாறு தலைமை கோரும் - சிறி­காந்தா

Published By: Jayanthy

14 Oct, 2019 | 11:55 AM
image

ஜனா­தி­பதித் தேர்­தலிலிருந்து வில­கு­மாறு சிவா­ஜி­லிங்­கத்தை கோரு­வ­துடன், அமைப்பு விதி­க­ளுக்கமைய ஏனைய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்­ப­தற்கு  ரெலோவின் தலைமை குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக கட்­சியின் செய­லாளர் சிறி­காந்தா தெரி­வித்தார்.



ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சிவா­ஜி­லிங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்­துள்ள நிலையில் அது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக ரெலோவின் தலைமைக்குழு  வவு­னி­யாவில் நேற்று கூடி­யது. அதன்­பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும்  தெரி­விக்­கையில்,  

கட்­சி­யி­னு­டைய நிலைப்­பாட்­டிற்கு மாறாக கட்­சியின் அனு­ம­தி­யின்றி சுயேச்சை வேட்­பா­ள­ராக சிவாஜிலிங்கம் தேர்­தலில் போட்­டி­யிட நிய­ம­னப்­பத்­திரம் தாக்கல் செய்து தேர்தல் களத்தில் செயற்­பட்­டு­க் கொண்­டி­ருக்­கிறார்.

அவர் கட்­சியின் கட்­டுப்­பாட்டை மீறி செயற்­பட்­டு­க் கொண்­டி­ருக்­கின்றார் என்ற முடிவின் அடிப்­ப­டையில், கட்­சியின் அமைப்பு விதி­க­ளுக்கு அமை­வாக அவர் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை ஒன்று ஏன் எடுக்கப்படக் கூடாது என்ற கார­ணத்தை அவர் தெரி­விக்க விரும்­பினால், அந்த கார­ணத்தை எழுத்து மூல­மாக எதிர்­வரும் சனிக்­கி­ழமை மாலைக்குள்  சமர்ப்­பிக்­கு­மாறு அவரை கோரு­வ­தென தலைமை குழு முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றது. 

அவர் விளக்­க­ம­ளிக்க தவ­றினால், அல்லது அவர் அளிக்கும் விளக்கம் தலைமை குழுவால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்றால் அவர் மீது ஒழுக்­காற்று விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும். அமைப்பு ­வி­தி­க­ளுக்­க­மை­வாக, தேவைப்­படும் ஏனைய நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும். 

அதே நேரத்தில் கட்­சியில் நீண்ட காலம் செயற்­பட்டு வரும் தீவிர உறுப்­பினர் என்ற வகையில் அவ­ருக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தற்கும் தலைமை குழு தீர்­மா­னித்­துள்ளது. 

அந்­த­வ­கையில்  உட­ன­டி­யாக தேர்தல் களத்­தி­லி­ருந்து வில­கு­மாறு தலைமை குழு அவ­ருக்கு வேண்­டுகோள் விடுக்கின் ­றது. அந்த வேண்­டுகோள் எழுத்து மூல­மாக அவ­ரிடம் கைய­ளிக்­கப்­படும். இந்த முடி­வுகள் நீண்டநேர கலந்­து­ரை­யா­ட­லுக்கும் கருத்து பரி­மாற்­றத்­திற்கும் விவா­தங்­களுக்கும் பிறகே ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  

கட்­சியின்  யாழ்.கிளை நேற்­றைய ­தினம்  இந்த விடயம் தொடர்­பாக கூடி கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தது. அந்த விடயம் தொடர்­பாக கலந்­து­ரை­யாட கட்சியின்  மாவட்ட கிளை­க­ளுக்கு உரிமையுண்டு. அந்த அடிப்­ப­டையில் நேற்று அங்கு ஒரு கூட்டம் நடை­பெற்­றது. அதில் கருத்து பரி­மாற்­றங்களும் இடம்­பெற்­றன. ஆனால் தீர்­மானம் எதுவும் எட்­ட­ப்பட்­டி­ருக்­க­வில்லை. கட்­சியின் தலைமை குழுவே இந்த விட­யத்தில் முடி­வெ­டுக்கும் அதி­கா­ரத்­தை­ கொண்­டிருக்­கின்­றது. 

ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆதரிப் பது என்று நாம் தீர்­மானம் எடுக்­க­வில்லை. தற்­போது ஆறு தமிழ்க் கட்­சிகள் கருத்­தொற்­றுமை கண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கு  சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

 குறித்த கோரிக்கைகளை  ஏற்றுகொள்வார்களா இல்லையா என்று ஆரூடம் எதுவும் கூற முடியாது. இந்த கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய கடமை, தேவை எமக்கு இருக்கிறது. ஏற்றுக்கொள்வார்களா என்பதை சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36