பெண் அரசியல்வாதியின்உடலை காலால் மிதிக்கும் துருக்கி ஆதரவு ஆயுதகுழுவினர்- வடசிரியாவில் இடம்பெறும் யுத்த குற்றங்கள்; - வீடியோ இணைப்பு

Published By: Rajeeban

14 Oct, 2019 | 10:25 AM
image

குர்திஸ் பெண் அரசியல்வாதியொருவரை துருக்கி படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொலை செய்ததை காண்பிக்கும் வீடியொ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குர்திஸ் ஆதரவு எதிர்கால சிரிய கட்சியின் செயலாளர் நாயகம் ஹெவ்ரின் கலாபின்  குண்டு துளைக்கப்பட்ட வாகனத்தையும் அதற்கு அருகில் இராணுவசீருடையுடன் பலர் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இன்னொரு வீடியோவில் கெவ்ரின் கலாவ் என கருதப்படும் பெண் ஒருவர் இடிபாடுகளிற்கு இடையில் சடலமாக காணப்படுவதை காணமுடிகின்றது.

அவரது உடலிற்கு மேல் நின்றுகொண்டு அதனை நபர் ஒருவர் படம்பிடிப்பதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அந்த நபர் குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தை காலால் தட்டியவாறு இது பன்றிகளின் சடலம் என தெரிவிக்கின்றார்.

வீடியோவில் காணப்படும் வாகனம் கெவ்ரின் கலாவ்பினுடையது என்பதை உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

இதேவேளை சிரிய ஜனநாயக பேரவை கெவ்ரின் கலாவ்வினை துருக்கி இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஆயதக்குழுக்களே  கொலை செய்தனர் என குற்றம்சாட்டியுள்ளது.

துருக்கி ஆதரவு ஆயுதகுழுவினர் தாக்குதலின் போது அவரை காரிலிருந்து வெளியே இழுத்துக்கொலை செய்தனர் அவரது வாகனச்சாரதியையும் கொலை செய்தனர் என சிரிய ஜனநாயக பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை வடசிரியாவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் இனந்தெரியாத நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் என்னை படமெடுங்கள் பன்றிகள் சிறைக்கைதிகள் கொலை செய்யுங்கள் என கூச்சலிடுவதையும் காணமுடிகின்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10