ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பங்களை சேர்ந்த 800 பெண்களும் குழந்தைகளும் தப்பியோட்டம்- வடசிரிய முகாமில் குழப்பநிலை

Published By: Rajeeban

13 Oct, 2019 | 06:16 PM
image

வடசிரியாவிலிருந்து 800ற்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பின் குடும்பத்தவர்கள் தப்பியோடியுள்ளனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ள பகுதியிலிருந்து 785 ஐஎஸ் உறுப்பினர்களின் மனைவிமார்களும் குழந்தைகளும் தப்பிச்சென்றுள்ளனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குர்திஸ் படையினரின் பாதுகாப்பிலிருந்தவர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் மோதலில் ஈடுபடுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதுகாப்பு பலவீனங்களை பயன்படுத்தியே இவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

அய்ன் ஐஎஸ்எஸ்ஏ முகாமை கூலிப்படைகள் தாக்கினர் இதனை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டவர்கள் முகாமிற்கு பாதுகாப்பளித்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர் என குர்திஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாமிற்குள் பாரிய குழப்பநிலை காணப்படுவதாக சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐஎஸ் குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமிலேயே இந்த குழப்பநிலையேற்பட்டுள்ளது.

முகாமில் தற்போது வெளிநாட்டு பெண்கள் எவரும் இல்லை முகமூடியணிந்த ஆண்கள் சிலர் மோட்டர் சைக்கிளில் சுற்றிவருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ள.

இதேவேளை வெளிநாடுகளை சேர்ந்த ஐஎஸ் உறுப்பினர்களின் குழந்தைகள் காணாமல்போகும் ஆபத்துள்ளது என சேவ் த சில்ரன் கவலை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59