"விலை­ம­திப்­பற்ற வைரத்தை வீதியில் எறிந்து செல்ல தேவையில்லை"..!: தேவை­யற்ற கர்ப்­பத்தை தவிர்க்க சிறந்த குடும்­பத்­ திட்­ட­மி­டலை கையா­ளுங்கள்

Published By: J.G.Stephan

13 Oct, 2019 | 05:03 PM
image

ஒவ்­வொரு தம்­ப­தி­யி­னரும் தம் வாழ்­வினை அர்த்­த­மு­டை­ய­தாக  உண­ரக்­கூ­டிய ஒரு நொடி தாம் ஈன்றக் குழந்­தையின் முகத்தை பார்க்கும் அந்த கண­மென்றால் அது மிகை­யா­காது. அப்­ப­டிப்­பட்ட விலை­ம­திப்­பற்ற வைரத்தை வீதியில் எறிந்து செல்லும் அவ­லங்­களும் வெளி­நா­டு­களில் மாத்­தி­ர­மன்றி நமது நாட்­டிலும் நடந்­தேறி வரு­கி­றது.

இந்­நி­லையில் சரி­யா­ன­தொரு குடும்­பத்­தி­ட்ட­மிடல்  முறையை பேணாமை, தவ­றான உறவால் குழந்தைப் பெற்றல் போன்ற விட­யங்கள் நமது சமூ­கத்தில் ஒரு சாபக் கேடா­கவே  பார்க்­கப்­ப­டு­கின்­றது.  இதன் கார­ண­மா­கவே மேற்­கண்­ட­வாறு சர்ச்­சைக்­கு­ரி­யதும்,  சங்­க­டத்­திற்­கு­ரி­ய­து­மான  சம்­ப­வங்கள் இடம்­பெற்று  வரு­கின்­றன. இத்­து­ய­ரங்­களை சரி­யான குடும்­பத்­திட்ட முறை­யொன்­றினால் மட்­டுமே இல்­லா­தொ­ழிக்­கலாம். 

செப்டெம்பர்  26 ஆம் திகதி உல­கக்­ க­ருத்­தடை தின­மாக அனுஷ்டிக்கப்பட்டது.  இத்­தி­னத்தில் சமூ­கத்­திற்கு ஓர் சிறந்த விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்தும் நோக்கில் வைத்­தி­யரும் மகப்­பேற்று நிபு­ண­ரு­மான வைத்­திய கலா­நிதி மார்க்­கண்டு திருக்­குமார் வீர­கே­சரி வார வெளியீட்­டிற்கு வழங்­கிய  செவ்­வியின் முழு­மை­யான விபரம் வரு­மாறு.



 கேள்வி : கருத்­தடை குறித்து வைத்­தியர் என்ற ரீதியில் உங்­க­ளது தெளிவுபடுத்தல் என்ன ? 

பதில் :  தற்­கா­லத்தில் கருத்­தடை என்ற சொல்லை நாம் மருத்­துவ ரீதி­யாக பயன்படுத்­து­வ­தில்லை. அதற்கு பதி­லாக  'குடும்­பத்­திட்­ட­மிடல் முறை' என்ற  சொல்­லையே நாம் பயன்­ப­டுத்­து­கிறோம்.  உலகில் வாழும் ஒவ்­வொருவரும் தமது குடும்பம் பற்­றியும் குடும்ப அங்­கத்­த­வர்­களின் எண்­ணிக்கை பற்­றியும் தீர்­மா­னிக்கும் உரித்­து­டை­ய­வர்கள். இதன்பால்  தங்­க­ளது குடும்ப அங்­கத்­த­வர்­களின் எண்­ணிக்­கையை  முடிவு செய்து தேவை­யற்ற கர்ப்­பத்தை தவிர்ப்­ப­தற்­காக பயன்படுத்தும் ஒரு முறையே 'குடும்­பத்­திட்ட­மிடல் முறை' என நாம் வரை­ய­றுக்கிறோம்.

இதன்­மூலம் கர்ப்பம் என்­பது குழந்தை தேவை­யென கருதும் சந்­தர்ப்­பத்தில்  மாத்­திரம் கரு­வுற்­றலின் ஊடாக தாயின் உடல், உள ஆரோக்­கி­யத்­தையும் பிறக்­க­வி­ருக்கும் குழந்­தையின் ஆரோக்­கி­யத்­தையும் சீராக மேம்­ப­டுத்த இத்­திட்டம் பெரிதும் துணை புரி­யு­மென  நான் கரு­து­கிறேன்.   அத்­தோடு ஒரு பெண் ஏற்­க­னவே கருத்­த­ரித்து குழந்தை பெற்றிருப்­பா­ராயின்,  அடுத்த குழந்­தையை  பெற்று கொள்­வ­தற்­கான கால இடை­வெ­ளியை இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­க­ளாக நிர்­ண­யிப்­பது குழந்­தையின் சீரான ஆரோக்­கி­யத்தில் முக்­கிய பங்கு செலுத்தும். அத்­தோடு இக்­கு­டும்­பத்­திட்ட முறை­க­ளினால் நிரந்­த­ர­மாக  குழந்தை இல்­லாமல் போகும்  வாய்ப்­புக்­களும் உண்டா என்­பது பற்றி பல சர்ச்­சைக்­கு­ரிய வினாக்­களும் எழுப்­பப்­பட்டுகின்றன.

உண்­மையில் குடும்­பத்­திட்ட முறை  பிர­தான மூன்று நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. அதில் முதல்  நோக்கம் தம்­ப­தி­யி­னரின்  முத­லா­வது கர்ப்­பத்தை தள்ளி போடு­வ­தாகும்.  உதா­ர­ண­மாக,  பல்­க­லைக்­க­ழ­கத்தில் பயிலும் மாணவி தனது படிப்பை நிறைவு செய்யும் வரையில் தான் கர்ப்­ப­மா­வதை தள்ளி போடு­வதை குறிக்கும். 2ஆவது  நோக்கம் இரண்­டா­வ­தா­கவோ  மூன்­றா­வ­தா­கவோ கர்ப்­ப­ம­டையும் போது முத­லா­வது குழந்தை பெற்ற பின்னர் அடுத்த குழந்­தையை பெற்றுக் கொள்­வ­தற்­கான  கால  அளவை 01 அல்­லது 2  வரு­டங்­க­ளுக்கு பின்னர் திட்­ட­மி­டலாகும்.

3 ஆவது முறை­யா­வது எமக்­கான  குழந்தைகள் போது­மென தீர்­மானித்ததன் பின்னர் நிரந்­த­ர­மாக குடும்­ப­த் திட்ட முறை­யையோ அல்­லது குடும்­ப­திட்ட முறை­களில் மிகவும் நம்­ப­க­ர­மான  முறை­யொன்றை கையாள்­வதன் மூல­மாகவோ  தேவை­யற்ற கர்ப்­பத்தை தவிர்ப்­ப­தற்­கான  முறை­களாகும். இம்­மு­றையை  பொது­வாக  சத்­திர சிகிச்சை மூலமும் மேற்­கொள்­ளலாம் . 

இதை­விட கர்ப்­பத்தை தவிர்க்­கவோ அல்­லது கர்ப்­பக்­கால அள­வு­களை  நீடிக்­கவோ பல்வேறு  வகை­யான  குடும்­பத்­திட்­ட­மிடல்  முறைகள் பயன்படுத்­தப்­பட்டு வரு­கி­ன்றன. 

இதில்  ஒரு சில  முறைகள் ஆண்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் ஆணு­றைகள்  பெண்­களால் பயன்­ப­டுத்­தப்­படும் நம் நாட்டு பாவ­னை­யி­லுள்ள  சில தர­மான மாத்­தி­ரை­களை  தினமும் பயன்­ப­டுத்த வேண்டும். உதா­ர­ண­மாக 'டீபோ புரோ­வீரா ' என்ற  மூன்று  மாதங்­க­ளுக்கு  ஒரு முறை கையில் ஏற்­றப்­படும் ஊசி­முறை­யினை  கூறலாம். பல நவீன முறை­களும் தற்­போது பாவ­னையில் உண்டு. இம்­முறை­களால் சுமார் 3 – 5 வரு­டங்கள் வரை தேவை­யற்ற கர்ப்­பத்தை தவிர்க்­கலாம். நவீ­ன­ம­டைந்து வரும் மருத்­துவ உலகில் சரி­யா­னதும் நம்பகத் ­தன்­மை­யு­டை­ய­து­மான  முறையை  கையாண்டு ஆரோக்­கி­ய­மான  சமூகத்தை உருவாக்குவதே இத்­திட்­டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

  கேள்வி:- தற்­போது வீதி­க­ளிலும், குப்பைக்­கூ­ழங்­க­ளிலும் வீசி­யெ­றி­யப்­படும் சிசுக்­களின் தொகை அதி­க­ரித்­துள்­ளது. இது குறித்து உங்­களின் கருத்து என்ன? இதில், குடும்­பத்­திட்­ட­முறை எவ்­வாறு பங்களிப்பு செய்­கி­றது?

பதில்:- பிள்­ளைப்­பேறு என்­பது ஒரு குடும்­பத்­தி­னரால், கொண்­டா­டப்­ப­டக்­கூ­டி­யதும், குடும்­பத்­திற்கு வர­வுள்ள புதிய வர­வெ­னக்­க­ருதி மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­யக்­ கூ­டியதுமான ஓர் விட­ய­மாகும். மாறாக ஒரு சமூக கட்­ட­மைப்­பிற்கு புரள்வானதும், தவ­றான  உறவால் கர்ப்பம் தரிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அதனை ஒரு  குடும்­பத்­தாலோ, சமூ­கத்­தி­ன­ரா­லேயோ அக்­குழந்தையை ஏற்­றுக்­கொள்ளும் மனப்­பான்மை எமது சமூக மட்­டத்தில் வள­ர­வில்லை. ஒரு திரு­ம­ண­மா­காத பெண்ணோ, திருமண­மாகி கண­வனை இழந்த  பெண்­ணொ­ரு­வரோ கர்ப்பம் தரிக்­கும்­பொ­ழுது, கர்ப்­பத்தை மறைக்க சில சம­யங்களில் முயற்­சித்­தாலும் கூட தோல்வி­ய­டையும் பட்­சத்தில், பிர­ச­வித்தே ஆக வேண்­டு­மென்ற கட்­டா­யத்­தினால், குழந்­தையை  பிர­ச­வித்த பின்னர், உயிரு­டன் கொலை­ செய்தும் வீதி­யோரங்களில்  வீசி­யெ­றிந்து செல்­வதையும் பார்க்­கிறோம். இது உண்மையில் மிகவும் வேத­னை­யா­ன­தொரு விட­ய­மாகும். இதனை தடுக்க சரி­யான குடும்­பத்­திட்­ட­மு­றையால் மட்­டுமே சாத்தியம்.

மேலும் ஒரு கர்ப்பம் மூன்று சந்­தர்ப்­பங்­களில் நிக­ழலாம். சரி­யான  குடும்­பத்­திட்ட முறை­யினை பயன்­ப­டுத்­தாமை, கர்ப்பம் அடை­ய­மாட்டோம் என தம்­ப­தி­யினர் கருதி உறவில் ஈடு­ப­டுதல்,  இது முற்­றாக பிழை­யான ஒரு எண்­ண­மாகும். இதனால் கர்ப்பம் தரிப்­ப­தற்கு 85% வாய்ப்பா­க­வுள்­ளது. இதனால் சரி­யான திட்­ட­மிடல் என்­பது முக்­கி­ய­மாகும். இதற்­காக வைத்­தி­யர்­களை நாடியும் ஆலோ­ச­னை­களை பெறலாம்.  மேலும், சில குடும்­பங்­களில் முறை­யற்ற விதத்தில் குடும்­பத்­திட்­டத்தை கையாள்­வது. உதா­ர­ண­மாக 'மெட்லின்' எனப்­படும் ஒரு­வகை மாத்­தி­ரையை  அவர்கள் தினமும் பயன்­ப­டுத்த வேண்டும். ஒன்று அல்­லது  இரண்டு தினங்­க­ளுக்கு மாத்­திரை எடுக்க மறுக்கும் சந்­தர்ப்­பத்தில் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்­புண்டு. மேலும் ஆணு­றைகள் பயன்­பாடு, தம்­ப­தி­யினர் இயற்­கை­யான முறையை கையாளும் வழி­மு­றைகள் என்­ப­வற்றால் தேவை­யற்ற கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்­புகள் உள்­ளதால், சரி­யான குடும்­பத்­திட்ட முறையை கையாள்­வது உத்­த­ம­மென்­பதே எனது வேண்­டுகோள்.

கேள்வி:- நவீன காலத்தில் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு முறையால், ஏற்­படும் நன்மை, தீமை­கள் எது­வென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்:-  குடும்­பத்­திட்ட  முறை­க­ளினால் பல்­வேறு நன்­மை­களும் ஒரு சில தீமைகளும் மட்­டுமே உள்­ளன. உண்­மையில் கூறப்­போனால், தீமை­களை விட நன்­மைகள் அதி­க­மென்ற கார­ணத்­தினால் மட்­டுமே குடும்­பத்­திட்ட முறை­யினை பின்­பற்­று­மாறு தம்­ப­தி­யி­னர்  வலியுறுத்­தப்படுகின்றனர். நன்மைகள் எது­வென நான் ஏற்­க­னவே கூறியிருந்தேன். 

மேலும் மாத­வி­லக்கின் போது அதிக குரு­திப்­போக்கு ஏற்­படும் சந்­தர்ப்­பத்தின்  போது வைத்திய ஆலோசனையுடன் மாத்திரை பயன்படுத்தி பயன்பெறலாம். மேலும், ஒரு சில பெண்களுக்கு அவர்களின் குடும்ப ரீதியாக சூலகக்கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் என்பன ஏற்படக்கூடிய வாய்ப்புடையவர்கள், ஊசிகள், 'ஜடோல்' எனும் கைத்தோல் பகுதிகளில் வைக்கப்படும்  குச்சிகளையோ பாவிப்பதனூடாக அவர்களுக்கு அதிலிருந்து முழுமையாக விடுபட வாய்ப்புகள் அதிகமென்றே கூறலாம்.  

அத்தோடு சூலகக்கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் என்பன குடும்பத்திட்ட முறைகளினாலேயே ஏற்படுகின்றதென எமது சமூகத்தில் கூறுவதை நான் அதிகம் கண்ணுற்றிருக்கிறோம். 

இது முற்றிலும் தவறானதொரு சிந்தனை. இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அத்தோடு, நான் ஏற்கெனவே கூறியது போன்று நம்பகரமான குடும்பத்திட்ட முறையொன்றை கையாள்வது, தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க மிகவும் பொருத்தமான அணுகுமுறையாகும். 

               
- ச.லோகதர்ஷினி -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04