ஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது?

Published By: J.G.Stephan

13 Oct, 2019 | 01:27 PM
image

நா.தனுஜா

மஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட ­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மூன்று புதல்­வர்­களின் திரு­மண நிகழ்வை விம­ரி­சை­யாக நடத்­து­வ­தற்கும், தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் பெரு­ம­ளவு நிதி எங்­கி­ருந்து பெறப்­ப­டு­கி­றது என்று சர்­வ­தேச வர்த்­தக இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது:

இவ்­வ­ரு­டத்­தி­லேயே நாங்கள் கட­னுக்­கான மிக அதிக வட்­டியைச் செலுத்திக் கொண்­டி­ருக்­கிறோம். அவ்­வாறு செலுத்த வேண்­டிய தொகையை எதிர்­வரும் 5 வரு­டங்­களில் 5 ட்ரில்­லியன் ரூபா வரையில் குறைத்­துக்­கொள்­வ­தற்கு எம்மால் இய­லு­மாக இருக்கும். நாங்கள் கடன்­களைப் பெற்று, அவற்றின் மூலம் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில்லை. மாறாக அரச – தனியார் பங்­காண்­மையின் ஊடாக தனியார் துறை­யி­னரின் முத­லீ­டு­க­ளைப்­பெற்று அபி­வி­ருத்தித் திட்­டங்­களை செயற்­ப­டுத்தி வரு­கின்றோம்.

எனவே ஒரு­வேளை கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆட்­சி­ய­மைத்தால் அவ­ரிடம் கேட்­ப­தற்கு ஒரு கேள்வி இருக்­கின்­றது. மஹிந்த ராஜ­பக்ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­ட­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மூன்று புதல்­வர்­களின் திரு­மண நிகழ்வை விம­ரி­சை­யாக நடத்­து­வ­தற்கும், தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் பெரு­ம­ளவு நிதியை எங்­கி­ருந்து பெற்­றுக்­கொள்­கின்­றார்கள் என்று தெரி­ய­வில்லை. அதுவே இன்று ஒட்­டு­மொத்த நாட்­டி­னதும் கேள்­வி­யாக இருக்­கின்­றது. அத்­தோடு குறித்­த­ளவு நிதி நாட்­டி­லி­ருந்து காணாமல் போயி­ருக்­கி­றது என்று தகவல் கிடைத்­தி­ருக்­கி­றது.

அவ்­வா­றெனின் அவர்­களை ஏன் சிறையில் அடைக்­க­வில்லை என்று நீங்கள் எம்­மிடம் கேட்­கலாம். காமினி திஸா­நா­யக்க, லலித் அது­லத்­மு­தலி, ரண­சிங்க பிரே­ம­தாஸ போன்றோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள். ஆனால் அச்­சம்­ப­வங்கள் தொடர்பில் ஒரு­வ­ரை­யேனும் விசா­ரணை செய்து சிறையில் அடைப்­ப­தற்கு இய­லு­மாக இருந்­ததா? உலகில் முகாபே, கடாபி, இடி­அமீன் போன்­ற­வர்­களை உதா­ர­ண­மாகக் கூறலாம். அண்­மையில் உயி­ரி­ழந்த முகாபே ஊழல்­மோ­ச­டியில் ஈடு­பட்டு, சேர்த்த நிதி தொடர்பில் முழு உல­கிற்கும் தெரியும். ஆனால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்­யவோ அல்­லது சிறையில் அடைக்­கவோ முடி­ய­வில்லை.

அதே­போன்று ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவை மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் தான் படு­கொலை செய்­தார்கள் என்று கூற­வில்லை. ஆனால் காரண காரி­யங்­களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மஹிந்த ராஜ­பக்ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரின் மிக் விமானக் கொள்­வ­னவு மோசடி தொடர்­பான தக­வல்கள்  பல­வற்றை வெளி­யி­டு­வ­தற்கு லசந்த விக்­கி­ர­ம­துங்க திட்­ட­மிட்­டி­ருந்தார். வசீம் தாஜுதீன் றகர் விளை­யாட்டில் ஏற்­பட்ட சில முரண்­பா­டுகள் கார­ண­மாக படு­கொலை செய்­யப்­பட்டார். இவை தொடர்பில் நாட்டு மக்கள் கேள்­வி­யெ­ழுப்ப வேண்டும்.

நாம் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஸ்தாபித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு முழு­மை­யான சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்தோம். அவர்கள் விரும்­பி­யதை எழு­து­வ­தற்கும், கேள்வி கேட்­ப­தற்கும் வாய்ப்­பி­ருந்­தது. ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பு கடந்த காலத்தைப் போன்றே பல்வேறு வன்முறைகள் நிறைந்த ஒரு குடும்ப ஆட்சிக்குள்ளேயே நாட்டை மீண்டும் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றது.

எனவே ஏற்கனவே அடைந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதா அல்லது மீண்டும் இருண்ட யுகத்திற்குள் செல்வதா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.  .

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44