நாட்டை தனிபெளத்த நாடாக மாற்ற  இடமளிக்க கூடாது - வரதராஜ பெருமாள் 

Published By: Jayanthy

13 Oct, 2019 | 02:30 PM
image

“இந்த நாடு நிலத்தால் ஒன்றுபட்டுக்கிடந்தாலும் மனதால் பிளவுபட்டு கிடக்கிறது” என திருகோணமலையில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலக திறப்பு விழாவின் போது  உறையாற்றிய முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் அவர் கூறியதாவது.. 

இந்த நாடு கடந்த காலத்தில் போர்களாலும் இனப்பிளவுகளினாலும் அழிந்துபோய் கிடக்கின்றது. நாம் நிலத்தால் ஒன்றுபட்டுக்கிடந்தாலும் மனதால் பிளவுபட்டு கிடக்கின்றோம். இந்நாட்டின் பிரஜைகள் சகோதரர்களாகவும்  நம்பிக்கையானவர்களாகவும் வாழவேண்டிய தேவை இருக்கின்றது. ஒரு காலத்தில் இந்நாட்டிலிருந்து ஈழத்தை பிரித்திட போராடியவர்களில் நானும் ஒருவன்.

அதேவேலை ஒரு தரப்பினர் இந்நாட்டினை சிங்கள பௌத்த நாடாக மாற்ற போராடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலை தொடரக்கூடாது. இனி ஒருபோதும் இந்நாட்டை பிரிப்பதற்கான போராட்டம் நடக்கப்போவதுமில்லை தமிழ் மக்கள் அதை விரும்பப்போவதுமில்லை. 

அதேபோன்று  இந்நாட்டை தனிபெளத்த நாடாக மாற்ற  இடமளிக்க கூடாது. இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது. எல்லா மதத்தவர்களுக்கும் உரியதாக நாடு இருக்கவேண்டும். இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படுவதுடன் அனைவரினதும் பாரம்பரிய அடையாளங்கள் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும்

இந்நாடு எங்கள் நாடு என்கின்ற உணர்வு மக்களிடையே வரவேண்டும். வருகின்ற ஐனாதிபதி தேர்தலுக்கு பிறகு கோத்­தா­பய ராஜ­பக்ஷவினதும்  மஹிந்த ராஜ­பக்ஷவினதும் தலைமையில் நாட்டில் உள்ள எல்லா மக்களும் பாதுகாப்பாகவும் சமத்துவமாகவும் அதேவேளை சமநீதியோடும் வாழுகின்ற சூழ்நிலையை உருவாக்கவேண்டும்.

ஆகவே மேற்படியான விடயங்கள் நடைபெறவேண்டுமானால் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் மக்களின் தேர்வு கோத்­தா­பய ராஜ­பக்ஷவாக இருக்கவேண்டும். அவருக்கே சகல மக்களும் வாக்களிக்க வேண்டும்.

இந்நாட்டி உள்ளவர் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு வரும் ஐனாதிபதி தேர்தலில் கோத்­தா­பய ராஜ­பக்ஷவிற்கு வாக்களியுங்கள். நான் மக்களாகிய உங்களிடம் கேட்கின்றேன் உண்மையானவர்களின் ஆட்சிவேண்டுமா? பொய்யர்களின் ஆட்சி வேண்டுமா? என்று.

கடந்த ஐந்து வருடங்களும் பொய்யர்களின் ஆட்சி நடந்தது அதனை மாற்றி உண்மையானவர்களின் ஆட்சி கொண்டுவரப்படவேண்டும்.  மஹிந்த மற்றும் கோத்­தா­பய ராஜ­பக்ஷ செய்வதை சொல்லுவார்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுபவர்கள். 

இந்நாட்டின் அனைத்து மக்களுக்குமான தலைவர்களாக இருப்பார்கள். இந்நாட்டை யாருக்கும் விற்கப்படாத சூழ்நிலைகளை உருவாக்குவார்கள். 

இப்போது அம்பாறையில் 15000 ஏக்கர் விக்கப்பட்டுள்ளது கொழும்பில் கடல் விக்கப்பட்டுள்ளது. திருகோணமலை விற்கப்படுவதற்காக விலை பேசப்படுகின்றது. இவ்வாரான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மக்கள் கோத்­தா­பய ராஜ­பக்ஷவிற்கு வாக்களிக்கவேண்டும். என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17