பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு 

Published By: Daya

12 Oct, 2019 | 12:05 PM
image

யாழ்ப்பாணம் கொக்குவில் - பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும்,  அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கிய இந்தியப் படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.

இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11, 12, ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கவச வாகனம் (செய்ன்பிளக்) கொண்டு வீதியில் போட்டு நசித்தும் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.

அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலலாவது தமிழ் இனப் படுகொலை சம்பவமாகப் பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாகச் சிறு நினைவு தூபியும் அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த நினைவு தூபி முன் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர், யாழ்.மாநகர உப தவிசாளர்,  சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும். மலர்களைத் தூவியும் தமது உணர்வுப் பூர்வமான அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08