“ களனி கங்கையின் நீர்மட்டம் 23 அடி உயர்ந்தாலே அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிப்படையும்”

Published By: Priyatharshan

21 May, 2016 | 10:14 AM
image

களனி கங்­கையின் நீர் மட்டம் 23 அடி உய­ரத்தை எட்­டினால் மட்­டுமே அம்­பத்­தலே புதிய நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை மூட­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென நக­ர­திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரி­வித்தார்.

எனினும் களனி கங்­கையின் நீர்­மட்டம் குறை­வ­டைந்து வரு­வதன் கார­ண­மாக அம்­பத்­தலே புதிய நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை மூட வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டாது என அமைச்சர் ஹக்கீம் உறு­தி­படத் தெரி­வித்தார். 

களனி கங்­கையில் எண்ணெய் கலந்­தி­ருப்­ப­தாக வெளி­யாகும் தக­வல்­களில் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை எனவும் அமைச்சர் ஹக்கீம் சுட்­டிக்­காட்­டினார்.

நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட அனர்த்த பாதிப்­பு­களால் தேசிய நீர் விநி­யோக த்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்­பாக பாரா­ளு­மன்றில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை விளக்­கத்தை வழங்கி விசேட உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக நில­வி­வரும் மழை மற்றும் வெள்ள நிலை­மை­யினால் பல நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் சேத­ம­டைந்­துள்ள தோடு மேலும் பல நிலை­யங்கள் சேற்றால் நிரம்­பி­யுள்­ளன. மின்­வி­நி­யோக தடை மற்றும் மண்­ச­ரிவு நிலை­மை­களால் நீர் விநி­யோ­கத்தில் தடைகள் ஏற்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­மை­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு பெரும்­பா­லான நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களை நாம் புன­ர­மைத்­துள்ளோம். அத்­தோடு தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் சுத்­தப்­ப­டுத்தல் நட­வ­டிக்­கை­களின் போது கடற்­ப­டை­யி­னரின் உத­விகள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

குறைந்த பட்­ச­மான நீர் விநி­யோ­கத்தை பேணு­வ­தற்­காக டீசல் மூலம் இயங்கும் மின்­பி­றப்­பாக்­கிகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வைத்­தி­ய­சா­லைகள் ஏனைய அத்­தி­யா­வ­சிய நிறு­வ­னங்கள் மற்றும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள முகாம்­க­ளுக்கு தற்­கா­லிக நீர் சேமிப்பு தாங்­கி­களை வழங்­கவும் பவு­சர்கள் மூலம் நீர் விநி­யோ­கத்தை முன்­னெ­டுக்­கவும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­தி­யா­வ­சி­ய­மான பகு­தி­க­ளுக்கு நீர் விநி­யோ­கத்தை மேற்­கொள்­ளு­வ­தற்கும் குறைந்­த­பட்ச நீர் விநி­யோ­கத்தை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் எமது அனைத்து பிராந்­திய அதி­கா­ரி­களும் மாகாண உதவி

நிலை­யங்­கள் அனர்த்த முகா­மைத்­துவ அலு­வ­ல­கங்கள் மாவட்ட செய­ல­கங்கள் ஆகியதரப்பினர் பிர­தேச செய­ல­கங்­க­ளுடன் ஒருங்­கி­ணைந்து பணி­யாற்­றுக்­கின்­றனர்.

ஆறுகள் மற்றும் நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்­டங்­களைக் குறைப்­பதன் மூலம் தேசிய நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை­யா­னது நீர்ப்­பா­சனத் திணைக்­களம், மகா­வலி அதி­கா­ர­சபை ஆகி­ய­வற்­றுடன் தொடர்ச்­சி­யாக இணைந்து பணி­யாற்­றி­வ­ரு­கின்­றது. எந்­த­வொரு அவ­சர நிலை­மை­யையும் முகங்­கொ­டுக்கும் வகையில் பரா­ம­ரிப்பு மற்றும் திருத்­தப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

களனி கங்­கையின் வெள்ள நீர் அதி­க­ரிப்பின் கார­ண­மாக அம்­பத்­தலே புதிய சுத்­தி­க­ரிப்பு நிலை­ய­மா­னது கடந்த சில நாட்­க­ளாக அதீத கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளது. களனி கங்­கையின் நீர் மட்டம் 23 அடியை அடைந்தால் மட்­டுமே அந்த நிலை­யத்தை முற்­றாக மூட­வேண்­டிய நிலை ஏற்­படும்.

எனினும் வியா­ழக்­கி­ழமை முதல் நிலை­யான நீர்­மட்­டக்­கு­றைவை அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை அதி­கா­லை­யா­ன­போது 19 அடி 11 அங்­கு­ல­மாக நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. அத்­துடன் மேல­திக நீரை வெளி­யேற்­று­வ­தற்­கான மாற்று ஏற்­பா­டு­களும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டுள்­ளன. அதற்கு கடற்­ப­டை­யி­னரின் உத­வி­களும் பாராட்­டுக்­கு­ரி­யவை.

போயா தினத்­திற்கு முன்­ன­தான இரு நாட்­க­ளிலும் பின்­ன­ரான இரு நாட்­க­ளிலும் கடல் மட்டம் வழ­மை­யா­கவே உயர்­வ­டையும். அதே­நேரம் கடல் மட்­டத்தின் நீர்­மட்­டத்­தையும் அவ­தா­னித்து வரு­கின்றோம். வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை மூன்று மணிக்கும் 4 மணிக்­கு­மி­டையில் கடல் மட்டம் 0.4 மீற்றர் உயர்­வ­டைந்­துள்­ளது. எனினும் இன்று சனிக்­கி­ழமை போயா­தினம் என்­பதால் கடல் மட்­ட­மா­னது 0.5 மீற்றர் உய­ரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் ஆற்றின் நீர் வேகம் குறைவடைவதோடு நீர் மட்டம் உயர்வதை அவதானிக்க முடியும்.

எனினும் வெள்ள நீர்மட்டம் குறைவடைவதால் களனிகங்கையில் நீர்மட்டம் 23 அடிகளை அடையாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். ஆகவே அம்பத்தலே புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படாது.

அதேநேரம் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது என்பது தவறான தகவலாகும். நாம் தொடர்ச்சியாக அந்த நீரை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01