இலங்கையின் ஜனநாயக தந்தை ரணில்  :  ஹரின் பெர்னாண்டோ 

Published By: R. Kalaichelvan

11 Oct, 2019 | 05:42 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒக்டோபர் அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டின் ஜனாநாயக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சஜித்தை தெரிவு செய்தமை உள்ளிட்ட பல விடயங்களில் பிரதம் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த விடயங்கள் மகத்தானவை. 

எனவே பிரதமரை இலங்கையின் ஜனநாயக தந்தை என்றே கூற வேண்டும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

கொழும்பு - காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒக்டோபர் மாதம் என்பது ஒரு புரட்சிகரமான மாதமாகும். காரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியின் போது இதே போன்றதொரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர்.

 அதை தொடர்ந்து பாதுகாப்பதற்கு இன்றும் மக்கள் ஆதரவை வழங்கியிருக்கின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவுடன் ஜனநாயகத்தை பாதுகாத்த தந்தை ஆவார். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்கும் விடயத்திலும் அவர் ஜனநாயக முறையில் செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சஜித்தும் ரணிலும் மாத்திரம் முன்னோக்கிச் செல்வதல்ல. அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்வதே எமது இலக்காகும்.

 அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் எவ்வித பிரிவினைவாதமும் கிடையாது. அவரது சாதாரண உடை பாவனையை விமர்சிப்பவர்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன், சஜித் இலட்ச கணக்கு பெருமதியான பாதணிகளை வாங்கி அணிந்து கொள்ளத் தெரியாதவர் அல்ல. சாதாரணமாக இருப்பது அவரது இயல்பாகும்.

இந்த இடத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் சவால் ஒன்றை விடுக்கின்றேன். இலத்திரனியல் திரை இல்லாமல் சஜித் பிரேமதாச போன்று பேசிக் காட்டினால அப்போதாவது அவரை வேட்பாளராக ஏற்றுக் கொள்வது பற்றி மக்கள் சிந்திப்பார்கள்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது ஸ்ரீலங்கா குடும்ப ஆட்சி கட்சியாகும். (ஸ்ரீலங்கா பவுல் பெரமுன ). எனவே வாக்களிக்க முன்னர் இது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14