"இரத்தத்தை, வியர்வையையும் மண்ணில் சிந்தினோம், கழுத்துப்பட்டி அணிந்து கொழும்பில்போர் செய்யவில்லை"

Published By: Vishnu

11 Oct, 2019 | 05:25 PM
image

(நா.தனுஜா)

நான் கொழும்பில் கழுத்துப்பட்டி அணிந்துகொண்டு போர் செய்யவில்லை எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, நாங்கள் எங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, கண்ணீரை இந்த மண்ணில் சிந்திக்கொண்டிருந்த தருணத்தில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் சென்று தங்கியிருந்தார். அவருடைய சகோதரன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே அவருக்கு இலங்கை மீண்டும் நினைவிற்கு வந்தது என்றும் கூறினார்.

இந்த நாட்டினதும், நாட்டுமக்களினதும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை என்னிடம் கையளிப்பதாக சஜித் பிரேமதாச உங்கள் முன்நிலையில் பகிரங்கமாகக்கூறி, மக்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருக்கின்றார். அவருடைய அந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் முழுமையாகப் பூர்த்திசெய்வேன் என்றும் உறுதியளித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. 

அக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய சஜித் பிரேமதாஸ, யுத்தத்தை களத்தில் நின்று போராடி வெற்றிகண்டவர்களுக்கே நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உயர்பதவிகளை வழங்க வேண்டும் என்றும், தான் அமைக்கின்ற புதிய ஆட்சியில் தேசிய பாதுகாப்பு குறித்த பொறுப்பை உண்மையான யுத்தவீரரான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிடம் ஒப்படைப்பேன் என்று குறிப்பிட்டார். 

அதன்போது மேடையிலிருந்து எழுந்துவந்து மக்களை நோக்கி கையசைத்த பொன்சேகா, அடுத்ததாகப் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சி உயர்ந்தபட்ச ஜனநாயகத்தன்மை வாய்ந்த கட்சியாகும். கொள்கை அடிப்படையில் எமக்கிடையே சிறு முரண்பாடுகள் காணப்பட்டன. ஆனால் இறுதியில் எமக்கிடையில் கலந்துரையாடி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தோம். அதிலிருந்து எமக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் சஜித் பிரேமதாஸவையும், மக்களாகிய உங்களையும் நிச்சயமாக வெற்றிபெறச் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34