நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையை கோத்தாபய அறிவாரா ? -நவீன் கேள்வி 

Published By: R. Kalaichelvan

11 Oct, 2019 | 03:50 PM
image

(நா.தனுஜா)

எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் வாழும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளும், கஷ்டங்களும் தெரியுமா? இல்லை. ஆனால் சஜித் பிரேமதாஸ மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.

 கடந்தகாலத்தில் ஜனநாயகத்தை முன்நிறுத்தி ரணசிங்க பிரேமதாஸ, காமினி திஸாநாயக்க போன்றோர் போராடினார்கள். இன்று அந்தப் போராட்டத்தை மக்களின் பங்களிப்போடு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. அக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நேற்று காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது சஜித் பிரேமதாஸவின் வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

 நாங்கள் மிகவும் முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கின்றோம். எமக்கிடையில் எவ்வித பேதங்களோ அல்லது முரண்பாடுகளோ இல்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சஜித் பிரேமதாஸவை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காகக் கைகோர்த்திருக்கின்றோம்.

எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டில் வாழும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளும், கஷ்டங்களும் தெரியுமா? இல்லை. ஆனால் சஜித் பிரேமதாஸ மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் பிரச்சினைகள் என்னவென்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். 

எமக்கு திடீரென்று மேலே இருந்து குதிக்கின்ற ஒரு தலைமைத்துவம் தேவையில்லை. மாறாக மக்களுக்கான சிந்தித்து செயற்படக்கூடிய, ஜனநாயகத்தன்மை மிக்க, மனிதநேயமுள்ள சஜித் பிரேமதாஜவைப் போன்ற தலைவரே தேவை என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04