இந்தியாவில் பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் மங்களூரில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இசைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் நிச்சயம் பேரிழப்பு. ஈடுசெய்யமுடியாத இழப்பு.
மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி பிறந்தார்.
கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
கத்ரி கோபால்நாத் 2004ல் பத்மஸ்ரீ பட்டத்தையும் கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.
கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் கத்ரி கோபால்நாத்.
டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005-ல் கின்ஸ்மென் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.
ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்சுடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார். மணிகாந்த் கத்ரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM