சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது - ஜனாதிபதி

Published By: Digital Desk 4

10 Oct, 2019 | 06:23 PM
image

சுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரத்திற்கு வருகின்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றாடல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பில் அனைவர் மீதும் உள்ள பொறுப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காடுகளை பாதுகாத்தல், மரம் நடுதல் மற்றும் சுற்றாடல் மீது கரிசனை கொள்ளுதல், மரம், செடிகொடிகள், உயிரினங்கள் உட்பட பூமித் தாயை நேசிப்பது, அதனை வளப்படுத்துவது

மனிதர்கள் என்ற வகையில் எம்மீதுள்ள அடிப்படை பொறுப்பும் கடமையுமாகுமென்றும் தெரிவித்தார்.

அதேபோன்று தான் வாழும் சூழல், மரம், செடிகொடிகள் மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு பிள்ளைகளுக்கு சிறுபராயம் முதல் பயிற்றுவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் சுற்றாடலை பாதுகாப்பதற்காக தான் கடந்த 05 வருட காலப்பகுதியில் முக்கியமான பல பணிகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக வரலாற்றில் முதன் முறையாக முப்படையினரையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததையும் நினைவுகூர்ந்தார்.

இலங்கையின் எதிர்கால தலைமுறையினரை சூழல் நேயமிக்க பிரஜைகளாக சமூகமயப்படுத்தி தாய் நாட்டின் அழகிய சுற்றாடல் மரபுரிமையினை எதிர்கால தலைமுறைக்கு கையளிக்கும் முக்கிய நோக்குடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கல்வி அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் தேசிய சுற்றாடல் முன்னோடிகள் நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பாடசாலை முறைமையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

40 சுற்றாடல் முன்னோடிகளுக்கு இதன்போது ஜனாதிபதியால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

“சுற்றாடலை பாதுகாப்பதில் சூழல் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் கல்விப் பிரிவின் பதிற் பீடாதிபதி பேராசிரியர் தேவக வீரகோனினால் விசேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

2019 சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் அணிவிப்பு நிகழ்வை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நினைவு சஞ்சிகையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுற தேவப்பிரிய, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21