ஜனாதிபதி தேர்தல்வன்முறை குறித்து 156 முறைபாடுகள் பதிவு  :  தேர்தல் ஆணையகம்

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 06:20 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில் முடிவடைந்துள்ள 48 மணித்தியாலயத்தில் 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 

இந்த முறைபாடுகள் தொடர்பில் அறிக்கை விடுத்துள்ள தேர்தல் ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிவரையான 48 மணித்தியாலத்திற்குள் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணி முதல் புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிவரையான 24 மணித்தியாலயத்தில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை பிற்பகல் வரையான 48 மணித்தியாலயத்தில் தேர்தல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் ,தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாக 153 முறைபாடுகளும் தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

அதேவேளை மாவட்ட தேர்தல்கள் விசாரணை நிலையங்களுக்கு தேர்தல் சட்மீறல்கள் தொடர்பாக 58 முறைப்பாடுகளும் , வன்முறை தொடர்பாக முறைப்பாடொன்றும்மாக மொத்தம் 59 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதற்கமைய இதுவரை 156 தேர்தல் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51