தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை தயா­ரிக்கும் பணிகள் மும்­முரம்  

Published By: J.G.Stephan

10 Oct, 2019 | 12:05 PM
image

(ரொபட் அன்­டனி)

எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம்  16ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை தயா­ரிக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை தயா­ரிப்­ப­தற்­காக அர­சியல் கட்­சிகள் மற்றும் வேட்­பா­ளர்­க­ளினால் விசேட நிபு­ணத்­துவம் வாய்ந்த குழுக்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.



ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச, சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, தேசிய மக்கள் சக்தி அமைப்பின் வேட்­பாளர் அனுரகுமார திசா­நா­யக்க  ஆகி­யோரே  இவ்­வாறு தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை தயா­ரிக்கும் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.   

ஜனா­தி­பதி தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் க­ள­மி­றங்­கி­யுள்ள நிலை­யிலும் இந்த மூவரின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களே  பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன.

வேட்பு மனு தாக்­கல்கள் நிறை­வ­டைந்து இன்று முதல்  தேர்தல் பிர­சார கூட்­டங்கள் ஆரம்­ப­மா­கின்­றன. இந்­நி­லையில் இன்னும் சில தினங்கள் அல்­லது  ஓரிரு வாரங்­களில் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளியி­டப்­படும் என்று  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி கொள்­கைகள், திட்­டங்கள்  இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அனு­கு­முறை,  பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான யோசனை,  கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து, மின்­சாரம், உள்­ளிட்ட துறை­க­ளி­லான புதிய திட்­டங்கள் என்­பன தொடர்பில் வேட்­பா­ளர்கள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் குறிப்­பி­ட­வுள்­ளனர். 

நாட்டின் துறைசார் அபி­வி­ருத்­திகள் மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் வெ ளிவி­கார கொள்கை, அர­சியல் கொள்கை, தேசிய ஒற்­றுமை, புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்க  கொள்­கைகள், இளைஞர் அபி­வி­ருத்தி, வடக்கு–கிழக்கில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களின் வளர்ச்சி, மலை­யக மக்­களின் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு யோச­னைகள் என்­ப­னவும் பிர­தான வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில்  உள்­ள­டங்­க­வுள்­ளன. 

மேலும்  புதிய  அர­சியல் கலா­சா­ரத்தை நோக்கி பய­ணித்தல், புதிய அர­சி­ய­ல­மைப்பு விடயம், தேர்தல் முறை மாற்றம், புதிய  தொழில் முயற்­சிகள், தொழில் வாய்ப்­புக்கள்,  முதி­யோ­ருக்­கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களில்  இடம்பெறவுள்ளன.  தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை  மக்களிடம் முன்வைத்து மக்களின் ஆதரவை கோருவதற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்  நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58