இலங்­கைக்கு பெருமை சேர்த்து, சர்­வ­தேச அளவில் பல வெற்றி­களை பெற்­று­தந்த வீரவீராங்­க­னை­க­ளுக்­கான மற்றும் சிறந்த விளையாட்டுத்துறை செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா நேற்­று­முன்­தினம் இடம்பெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவ் விழா நடைபெற்றது. 

இதில் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் கலந்­து­கொண்டு விரு­து­களை வழங்­கி­ வைத்­தனர்.

இதில் சிறந்த வீர­ராக சங்­கக்­கா­ரவும் சிறந்த வீராங்­க­னை­யாக தடகள வீராங்கனை நிமாலியும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த விளையாட்டுத்துறை செய்திகளை வழங்கும் பத்திரிகைக்கான விருது வீரகேசரி நாளிதழுக்கு கிடைத்ததுடன் விருதை நாளிதழின் விளையாட்டுத்துறைக்குப்பொறுப்பான ஆசிரியர் எஸ்.ஜே.பிரசாத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.