சிங்­கள தலை­மை­களின் யுக்­தி­களில் பங்­காளிக் கட்­சி­களின் பொறுமை

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 10:10 AM
image

தேசிய அணி­களைத் தெரிவு செய்­வதில் தடு­மாறித் தெளிந்த சிறு­பான்மைத் தலை­மைகள், தாம் ஆத­ரிக்கும் வேட்­பா­ளரை வெல்ல வைக்க கடைப்­பி­டிக்­க­வுள்ள யுக்­திகள் எவை? இக்­கட்­சி­களின் தலை­மை­க­ளுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தங்கள் என்ன? தமிழ், முஸ்லிம் வேட்­பா­ளர்­களும் கள­மி­றங்­கி­யுள்­ளதால், சிறு­பான்மை தலை­மை­களின் வாக்கு வங்­கி­களில் சரிவு ஏற்­ப­டுமா?

இக்­கேள்­வி­களின் கண்­ணோட்­டங்­க­ளூ­டா­கவே தேர்தல் களத்­திலும் சுழி­யோட வேண்­டி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய முன்­னணி வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் அதிக பங்­க­ளிப்பு,அழுத்­தங்­களைச் செலுத்­திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமது சமூகம் சார்­பாக எந்த நிபந்­த­னை­களும் முன்­வைக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கள், ஸ்ரீலங்கா பொது­ஜ­ன­ பெ­ர­மு­ன­வி­லுள்ள பங்­காளிக் கட்­சி­க­ளுக்கும் பொருந்தும்.

சமூக அபி­லா­ஷை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­காமல் எழு­மாந்­த­மாக வேட்­பா­ளர்­களை ஆத­ரிக்கும் நிலைமை சிறு­பான்மைத் தலை­மை­க­ளுக்கு ஏற்­பட்­டதேன்? இரு தரப்­பிலும் இந்­தியப் பிர­தமர் மோடியின் தனிப் பெரும்­பான்மை வெற்­றியே எதிர்­பார்க்­கப்­ப­டு­வதால், சிறு­பான்மைச் சமூ­கங்­களின் நிபந்­த­னைகள் பொருட்­டாகப் போவ­தில்­லை­யென்றா தனித்­துவ தலை­மைகள் மௌனித்­துள்­ளன. அல்­லது பௌத்த, சிங்­கள வாக்­கு­களை தென்­னி­லங்­கையில் அதி­க­ளவு ஈர்க்கும் சிங்­களத் தலை­மை­களின் யுக்­தி­க­ளுக்கு இரு அணி­க­ளி­லு­முள்ள சிறு­பான்மைத் தலை­மைகள் வழி­விட்­டுள்­ள­னவா?

எமது நாட்டின் சுதந்­திர அர­சியல் வர­லாறு இப்­ப­டி­யொரு சம பலத்­தி­லான ஜனா­தி­பதித் தேர்­தலை கண்­டி­ருக்­காது. ராஜ­ப­க்ஷக்­களின் தென்­னி­லங்­கைத்­த­ளத்தை உடைப்­பதில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் பிரே­ம­தா­ஸக்­களின் சிறு­பான்மைத் தளத்தை தகர்ப்­பதில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் எடுத்துக்கொண்ட யுக்­தி­க­ளுக்குள் சிறு­பான்மைச் சமூ­கங்கள் மாட்டிக் கொண்­டுள்­ள­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது.எனினும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­லுள்ள சிறு­பான்மைத் தலை­மை­க­ளுக்­கி­டையில் நிலவும் ஒற்­றுமை,விட்­டுக்­கொ­டுப்பு, இணைந்த செயற்­பா­டு­களை ஸ்ரீலங்கா பொது­ஜன  பெர­மு­ன­வி­லுள்ள தனித்­துவ கட்­சி­க­ளி­டையே காண முடி­யா­துள்­ளமை கவ­லையே. மேலும் இங்கு தனித்­துவ கட்­சிகள் இருப்­ப­தா­கவும் அர்த்தம் கொள்ள முடி­யாது. இந்த அணி­யி­லுள்ள தேசிய காங்­கிரஸ்,ஈழ­மக்கள் ஜன­நாயகக் கட்­சி­களை சிறு­பான்மைத் தலை­மை­க­ளாக அங்­கீ­க­ரிக்க முடிந்­தாலும் தேசிய காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்றப் பிர­தி­நி­தித்­துவம் கடந்த தேர்­தலில் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டதால் மக்கள் அங்­கீ­கா­ரத்­துக்­காக மீண்­டு­மொ­ரு­முறை கடு­மை­யாக உழைக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன சார்பில் கள­மி­றங்­கி­யுள்­ள­தாக ஊகிக்­கப்­படும்  ஹிஸ்­புல்லாஹ் தேசிய காங்­கி­ரஸின் இணக்­கத்­துடன் கள­மி­றங்­கி­ய­தாகக் கருதக் கடி­ன­மா­க­வு­முள்­ளது. ராஜ­

ப­க் ஷக்­களின் முகாம்­க­ளுக்குள் முஸ்லிம் தனித்­துவ தலைமை, தனிப்­பட்ட நபர்­க­ளுக்கு இடையில் இடை­வெளி­யுள்­ளதை இது உணர்த்­து­கி­றது. இந்த அணி­யி­னரின்   எதிர்­கால வளர்ச்­சிக்கு கோத்தாவின் வெற்றி தேவைப்படு­வதால், பகை­களைப் பொருட்­ப­டுத்­தாது வெவ்­வேறு கோணங்கள், தளங்­களில் நேரடி, மறை­முக முக­வர்­க­ளாக இவர்கள் கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைப் பொறுத்­த­வரை போட்டி, பகை­க­ளின்றி சிறு­பான்மைத் தலை­மைகள் ஆட்­டத்தில் இறங்­கி­யுள்­ளன. இத்­த­லை­மை­களின் பாரா­ளு­மன்ற ஆயுள்­களும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வெற்றி,தோல்­வி­களில் இல்லை.சஜித் பிரே­ம­தா­ஸவின் தோல்வி இக் கட்­சி­களின் பாரா­ளு­மன்றப் பலத்தில் அதிர்வை ஏற்­ப­டுத்­தி­னாலும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது. இது­வல்ல விடயம். வெல்லப் போகும் சிங்­களக் கட்சி, இந்­தியப் பிர­தமர் மோடியைப் போன்று தனிப்­பெ­ரும்­பான்­மை­யுடன் வென்றால் (வாக்கு வித்­தி­யா­சங்கள்) கடும் போக்­கர்­களின் அழுத்­தங்­களால் தோழமைக் கட்­சிகள் தூக்­கி­யெ­றி­யப்­ப­டலாம். ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்லிம் எம்­.பி.க்கள் ஒரு­மித்து அமைச்சுப் பத­வி­களைத் துறந்­ததால் விழித்துக் கொண்ட தென்­னி­லங்கைச் சமூகம் சிறு­பான்­மை­யி­னரின் பேரம்­பேசும் பலங்கள் பௌத்­தர்­களின் தாயக அபி­லா­ஷை­க­ளுக்கு ஆபத்தென்பதை உணர்ந்­துள்­ளன. தென்­னி­லங்கைச் சமூ­கத்தின் அச்­சத்தை போக்­கவே சில முஸ்லிம் தலை­மை­களின் ஆத­ரவை ஐக்­கிய தேசிய முன்­னணி தெரிவுபடுத்­தா­துள்­ளது.

சிறு­பான்மைத் தளங்­களில் (வடக்கு, கிழக்கு) தனக்கு வாக்­கு­க­ளில்லை என ராஜ­பக் ஷ அணி தெற்கில் அனு­தாபம் தேடு­வதும் இந்த யுக்­தி­க­ளில்தான். விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த யுத்­தத்தில் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்ட படை­யி­னரின் மனை­வியர் முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்­டங்கள் தென்­னி­லங்­கையில் பெரும் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தின."முஸ்­லிம்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து காப்­பாற்­றவே எமது சிங்­கள இளை­ஞர்கள் அங்­க­வீ­ன­மாக்­கப்­பட்­டனர். இப்­போது இச்­ச­மூ­கங்கள் எம்­மோடு இல்லை.

எண்பது வீத­முள்ள சிங்­கள மக்­க­ளிடம் இதை எடுத்துச் சொல்லி பௌத்­தர்­களின் அமோக ஆத­ரவைப் பெற்­றுத்­தா­ருங்கள் படை­யி­னரின் சகல பிரச்­சி­னை­களும் தனிப்­பெரும் பான்மைப் பலத்­துடன் தீர்க்­கப்­படும்" என்கின்றனர் மஹிந்தவும் கோத்தாவும்.இதை முறியடிக்க சிறுபான்மைக் கட்சிகளின் எந்த நிபந்தனைகளையும் ஏற்கவில்லை என்கின்றார் சஜித்.எண்பது வீத வாக்காளர்களுள்ள தெற்குத் தளங்களைத் திருப்திப்படுத்தும் இந்த யுக்திகளுக்குள் எமது நிபந்தனைகள் இடைஞ்சலாகும் என்பதால்தான் இரு தரப்பு அணிகளிலுமுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் தலைமைகள் ஒப்பந்தங்கள் செய்வதிலிருந்து விலகியுள்ளன. இம்முறை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஐந்துபேர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் பெரும்பான்மைச் சமூகத்தின் சந்தேகங்கள், ஐயங்களிலிருந்து ஒளிந்து கொள்ளும் யுக்திகளாகவே உள்ளன.

– சுஐப் எம் காசிம் –

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22