கம்பஹா மாவட்டத்தில் பல விபச்சார விடுதிகள் முற்றுகை

Published By: Digital Desk 4

08 Oct, 2019 | 03:07 PM
image

கம்பஹா மாவட்டத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஆயுர்வேத மருந்தகம் என்ற போலிப் பெயரில் இயங்கி வந்த, சட்ட விரோத விடுதிகள் பலவற்றை மேல் மாகாண  வடக்கு குற்றத்தடுப்புப்  பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

சீதுவ, நீர்கொழும்பு, கொச்சிக்கடை,  பியகம போன்ற பிரதேசங்களில் இவ்வாறான போலி ஆயுர்வேத நிலையங்கள் மிக நீண்ட காலமாக  இயங்கி வந்துள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 கட்டான, களுத்துறை, சிலாபம், கேகாலை, உக்குவளை, கம்பளை,  கொடகவெல, பொல்பித்திகம, ஹபரண, பிபில, ஹங்குரங்கெத்த, பல்லம, எல்லக்கல, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வயது 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட யுவதிகளும் பெண்களுமே இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் போலியாக நடத்தப்பட்டு வந்த இந்த விடுதிகளின் முகாமையாளர்களும் அடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02