வேட்புமனுத் தாக்கல் தினத்தில் இவ்வளவு முறைப்பாடுகளா ? இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவு - கபே

Published By: R. Kalaichelvan

08 Oct, 2019 | 12:42 PM
image

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் இயக்குனர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவ்வமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே சுரங்கி ஆரியவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து இன்றுவரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன்  வேட்புமனுக்கள் தாக்கல் செய்த தினமான நேற்றைய தினம் 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அதற்கு முன்னைய நாட்களில் 7 தேர்தல் மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் காணப்படுவதாகவும் குறிப்பாக பிரதான 3 வேட்பாளர்களின் சுவரொட்டடிகள் ஏராளமாக காணப்படுவதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பல பகுதிகளில் ஏராளமான பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வேட்பாளர்களை வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை ஒன்றின் மீது எண்ணெய் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கபே அமைப்பின் இயக்குனர் சுரங்கி ஆரியவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08