துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் - டிரம்ப் எச்சரிக்கை

Published By: Rajeeban

08 Oct, 2019 | 11:18 AM
image

சிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதியிலிருந்த தனது படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்,

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்கா குர்திஸ் ஆயுத குழுக்களை கைவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

துருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் உள்ள  நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17