சம்மாந்துறை விபத்தில் ஒருவர் பலி ; உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

Published By: Digital Desk 4

08 Oct, 2019 | 11:04 AM
image

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் விபத்தில் மரணமடைந்தவர் தலைகவசம் அணியாமை  வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட விபத்து குறித்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் பொலிஸார்  மேற்கண்டவாறு கூறினர்.

சம்பவ இடத்தில் பலியான 4 பிள்ளைகளின் தந்தையான அலியார் காசீம் முகமது இர்சாட்(வயது-34) என்பவர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற போது தலைகவசம் அணிந்திருக்கவில்லை.உள்ளுர் வீதி ஒன்றில் இருந்து பிரதான வீதியை கடக்கின்ற போது வீதி ஒழுங்கு முறையை சரியாக கவனிக்காமல் சென்றதனால் தான் குறித்த விபத்து துரதிஸ்டவசமாக இடம்பெற்றுள்ளது.

என்றும் குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை நேருக்கு நேர் மோதிய தனியார் குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்தினை செலுத்திய சாரதியான அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த   சமிந்த பிரியதர்சன (வயது -41) என்பவர் குடிபோதையில்  இருந்தமையும் மற்றும் உரிய வழித்தட அனுமதி பத்திரம்(வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம்) இன்றி  குறித்தபேரூந்து அதி வேகத்தில் செலுத்தப்பட்டமையாகும் என  பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

மேலும் திங்கட்கிழமை(7) அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பன வழிகாட்டலின் கீழ் சம்மாந்துறை அம்பாறை விசேட போக்குவரத்து பொலிஸாரால் குறித்த பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் சாரத்தி அனுமதி இன்றி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் வீதிச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று சம்மாந்துறை கல்முனை போன்ற பிரதேசங்களில் இருந்து தூர இடங்களிற்கு செல்லும் தனியார் பேரூந்து உரிய  வழித்தட அனுமதி பத்திரம் (வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம்) இன்றி போக்குவரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17