ஜனாதிபதித் தேர்தலும் புதுமையான விடயங்களும் !

Published By: R. Kalaichelvan

08 Oct, 2019 | 10:20 AM
image

(ரொபட் அன்டனி)

எதிர்வரும் நவம்பர்  மாதம் 16 ஆம் திகதி நடைபெற வுள்ள நாட்டின் எட்டாவது ஜனா திபதி தேர்தல் பல்வேறு  சுவாரஷ்ய மான  அம்சங்களை கொண்டுள்ளது.

மிக நீண்ட வாக்குச்சீட்டு கூடிய வேட்பாளர்கள்  பதவியில் உள்ள ஜனாதிபதி பிரதமர்  போட்டியிடாமை மற்றும் 20 வருடங்களின் பின்னர் பெண் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இம்முறை  தேர்தலில் இடம்பெறுகின்றன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலிலேயே  வாக்காளர்கள் மிக நீண்ட வாக்குச் சீட்டை பயன்படுத்தவுள்ளனர்.

இதுவரை  காலங்களிலும் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்தியதைவிட மிக நீண்ட வாக்குச் சீட்டு இம்முறை  பயன்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறு  மிக நீண்ட வாக்களிப்பு சீட்டு இம்முறை தேர்தலில் இடம்பெறுவதற்கு எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையே காரணமாகும்.

இந்த ஜனாதிபதி  தேர்தலில்   அரசியல் கட்சிகள் மற்றும்  சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  

41 பேர்   ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியிருந்த போதிலும்  வேட்பு மனு நேரத்தில் 35 பேர்  மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆறு பேர் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்களை  தாக்கல் செய்யவில்லை.  

எனினும் ஜனாதிபதி  தேர்தலில் 35 வேட்பாளர்கள் என்பது  இலங்கை தேர்தல் வரலாற்றில் மிகவும் கூடிய எண்ணிக்கையாகும்.  

அத்துடன் முக்கிய விடயமாக இம்முறை தேர்தலில் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியோ  பிரதமரோ  முன்னாள் ஜனாதிபதி அல்லது பிரதமரோ போட்டியிடவில்லை.    

தற்போது பதவியில்  இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரோ இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி  தேர்தல்களிலும்   பதவிலிருந்த ஜனாதிபதி அல்லது பிரதமர்கள் போட்டியிட்டிருந்தார்கள். ஆனால் இம்முறை அவ்வாறு எவரும் போட்டியிடவில்லை.

அதேபோன்று பிரதான இரண்டு கட்சிகளும்  இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது சுதந்திரக் கட்சி என எந்தப் பிரதான கட்சியும் தமது சின்னங்களில்  தேர்தலில் களமிறங்கவில்லை.  

அத்துடன் மிக முக்கியமாக 20 வருடங்களின் பின்னர்  ஜனாதிபதி  தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளார்.

இம்முறை  தேர்தலில் கலாநிதி அஜந்தா விஜேசிங்க பெரெரா எனும் பெண்மணி போட்டியிடுகின்றார்.  இதற்கு முன்னர் 1999  ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30