இன்று வழமைக்கு திரும்பியது ரயில்வே சேவைகள்!

Published By: R. Kalaichelvan

08 Oct, 2019 | 09:57 AM
image

ரயில்வே ஊழியர்களின் 12 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நேற்று மாலை கைவிடப்பட்ட நிலையில் இன்று ரயில்வே சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது.

ஜனாதிபதி , போக்குவரத்து அமைச்சர் , சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோருடன் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்த போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை முடித்து கொண்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனதுங்க சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்தே வேலை நிறுத்தத்தை கைவிடுவதென அவர்கள் தீர்மானித்தனர்.

பொது மக்­களை இன்­னல்­க­ளுக்கு ஆளாக்­காத வகையில் தொழிற்­சங்க நட­வ­டிக்­கையில் ஈடுப்­ப­டு­வது அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளி­னதும் பொறுப்­பாகும். எந்­த­வொரு பிரச்­சி­னையும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.  ஜனா­தி­பதி என்ற வகையில் வேலை நிறுத்­தத்தை கைவி­டு­மாறு கேட்டுக் கொள்­கிறேன். இவ்­வி­ட­யத்தில் கோரிக்­கைகள் தொடர்­பாக தீர்­வு­களை பெற்றுக் கொடுப்பேன் என்று இந்த சந்­திப்பில் ஜனா­தி­பதி  கூறினார்.

ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்­தையை முடித்து கொண்ட ரயில்வே தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஜனா­தி­ப­த­மியின் ஆலோ­ச­னையின் பேரில் போக்­கு­வ­ரத்து அமைச்சர் அர்­ஜூன ரன­துங்க சம்­பள நிர்­ணய சபையின் தலைவர் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.இதனை அடுத்தே வேலை நிறுத்­தத்தை கைவி­டு­வ­தென அவர்கள் தீர்­மா­னித்­தனர்.

கடந்த 12 தினங்­க­ளாக ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக அரச தனியார் துறை ஊழியர்களும் , பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53