காட்டுயானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்களின் குடிமனைகளுக்கு சேதம்  

Published By: Digital Desk 4

07 Oct, 2019 | 07:19 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை ராஜதுரை கிராமத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு காட்டுயானைகள் உட்புகுந்து  குடிமக்கள் இருவரின் சொத்துக்களை  சேதப்படுத்திச் சென்றுள்ளன.

இப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யானை தடுப்பு மின்சார வேலியினைத் தாண்டி  ஞாயிற்றுக்கிழமை இரவு  வந்த காட்டுயானைகள் உன்னிச்சை ராஜதுரை கிராமத்திலுள்ள சிறிய கடை ஒன்றினையும் வீடு ஒன்றினையும் தாக்கி சேதப்படுத்திச் சென்றுள்ளன.

காட்டுயானையினால் குறித்த வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த நெல், கச்சான் போன்றவற்றை தின்று சேதப்படுத்திச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை சிறிய முதலீட்டினைக் கொண்டு ஆரம்பித்த தமது சிறிய கடை யானையின் தாக்குதலில் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இச் சேதம் தொடர்பாக வீட்டு உரிமையாளரும் கடை உரிமையாளரும் கிராம சேவையாளரிடம், பொலிஸாரிடமும் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச் சேதங்களை  ஆயித்தியமலை பொலிஸ்  பார்வையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்த சேதத்திற்கு தமக்கு உரிய அரச அதிகாரிகள் நஸ்டஈட்டை பெற்றுத்தருமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19