"வெசாக் தினத்தை களியாட்டமாக கொண்டாட வேண்டாம்"

Published By: MD.Lucias

20 May, 2016 | 08:59 AM
image

நாட்டில் சீரற்ற கால­நி­லையால் அனர்த்தம் ஏற்­பட்­டி­ருக்கும் சூழ்­நி­லையில் வெசாக் தினத்தை எந்­த­வி­தத்­திலும் களி­யாட்­ட­மாக்கிக் கொள்ளும் தேவை­யில்லை என்று ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.அபே­யகோன் தெரி­வித்­துள்ளார்.

"மனதால் இர­சிப்போம், மதுவை தவிர்ப்போம்" என்ற தொனிப்­பொ­ருளில் இம்­முறை வெசாக் தினத்தை ஜனா­தி­பதி அலு­வ­லகம் ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆலோ­ச­னைக்­க­மைய ஜனா­தி­பதி அலு­வ­லகம் ஏற்­பாடு செய்­துள்ள வெசாக் பண்­டிகை நிகழ்­வுகள் இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தை அண்­மித்த பகு­தி­களில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்­பாக கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பீ.பி.அபேகோன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

வெசாக் தினத்தை களி­யாட்­ட­மாக்கிக் கொள்ளும் நோக்­க­மில்லை.

ஆயினும் மனிதப் பண்­பா­டு­க­ளையும் சமா­தா­னத்தின் செய்­தி­யையும் மக்­க­ளி­டத்தில் கொண்டு செல்­வ­தற்கும் இளம் சமு­தா­யத்­தி­னரை மதுப் பழக்­கத்­தி­லி­ருந்து காப்­பாற்றி நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் கொண்டு செல்லும் தேவை உள்­ளது.

இதற்­க­மை­யவே ஜனா­தி­பதி அலு­வ­லகம் இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளது. பெளத்­தா­லோக்க மாவத்தை ஜனா­தி­பதி அலு­வ­லகம் மற்றும் நிதி­ய­மைச்சு ஆகி­யவை இணைக்­கப்­பட்­டுள்ள இவ்­வெசாக் வல­யத்தில் போதை­ப்பொ­ருட்­களால் ஏற்­படும் தீங்­கினை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லான ஏரா­ள­மான தோர­ணங்கள் மற்றும் வெசாக் வெளிச்சக் கூடுகள் அமைக்­கப்­பட்­டி­ருக்கும்.

முதல் நாள் நிகழ்­வுகள் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தின் முன்­பாக மும்­மொ­ழி­க­ளிலும் வெசாக் பக்தி கீதங்கள் இசைக்கப்படும்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46