கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வ­தற்கு பொதுஜன பெரமுன கடும் பிர­யத்­தனம்: சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் உரை­யாடல்

Published By: J.G.Stephan

07 Oct, 2019 | 12:02 PM
image

(ஆர்.யசி)

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்­தி­ர­னுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்னர்.

இந்­நி­லையில் மஹிந்த, கோத்­த­பாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.


 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்­தினம் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்ளார். 

இது குறித்து கூட்­ட­மைப்பின் பேச்­ச­சாளர் சுமந்­தி­ர­னிடம் வின­வி­ய­போது அவர் தெரி­வித்­த­தா­வது,

கோத்­த­பாய  ராஜபக்  ஷ எனக்கு தொலை­பேசி மூல­மாக அழைப்பு விடுத்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்க முடி­யுமா என கேட்டார்.  "தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்த விருப்பம் தெரி­வித்­த­தாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­னிடம் தெரி­வித்தார். அதற்­க­மை­யவே நான் உங்­களை தொடர்­பு­கொண்டேன். எப்­போது நாம் பேசலாம்" என கோத்­தா­பய ராஜபக் ஷ என்­னிடம் கேட்டார். 

எனினும் கடந்த வாரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து சில விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதில் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவை எமக்கு பெற்­று­கொ­டுக்க முடி­யுமா என்ற கோரிக்­கையை என்­னிடம் முன்­வைத்தார். எனினும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன என்­பதை நான் அவ­ருக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன். 

அதா­வது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற வகையில்  சகல ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக உள்ளோம். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வு வேண்டும் என்­பதே எமது ஒரே நிலைப்­பாடு. இதில் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க உங்­களால் என்ன செய்ய முடியும், புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் உங்­களின் நிலைப்­பாடு என்ன? அதி­கார பகிர்வில் உங்­களின் நிலைப்­பாடு என்ன. என்ற விட­யங்­களை நான் கேட்டேன். எனினும் அவ­ரிடம் இருந்து ஆரோக்­கி­ய­மான பதில் வர­வில்லை. எனினும் அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் சந்­தித்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். அந்த அடிப்­ப­டையில் உங்­க­ளுடன் பேசவும் நான் தய­ரா­கவே உள்ளோம்  என்ற கார­ணியை நான் கூறினேன். 

அதற்­க­மை­யவே கோத்­த­பாய  ராஜபக் ஷ என்னை தொடர்­பு­கொண்டு பேசினார். தானும் மஹிந்த ராஜபக் ஷவும், பஸில் ராஜபக் ஷவும் இணைந்து மூவ­ரு­மாக எங்­களை சந்­திக்க தயா­ராக உள்­ள­தாக கூறினார். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் நான் தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது. எங்­களின் கூட்­ட­ணியில் மூன்று கட்­சிகள் உள்­ளன.அவர்­க­ளு­டனும் பேசி நாம் ஒன்­றாக உங்­களை சந்­திக்க முடியும் என்றேன். 

அத்­துடன் எப்­போது சந்­திப்பை நடத்த முடியும் என்ற கேள்­வி­யையும் கேட்டார். எனினும் அவர் மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­காக சிங்­கபூர் செல்­ல­வுள்­ளதால் நீங்கள் சிங்­கபூர் செல்ல முன்னர் சந்­திப்­பீர்­களா அல்­லது சென்று மீண்டும் நாட்­டுக்கு வந்­ததும் சந்­திப்­பீர்­களா என கேட்டேன். இது குறித்தும் எங்­களின் கோரிக்­கைகள் குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஸில் ராஜபக் ஷ ஆகி­யோ­ருடன் பேசிய பின்னர் மீண்டும் என்ன தொடர்­பு­கொள்­வ­தாக கூறினார். 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் நாம் இர­க­சி­ய­மாக யாரு­டனும் பேசி எமது கோரிக்­கை­களை இர­க­சி­ய­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் வெளிப்­ப­டை­யாக  எமது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு பதில் கேட்­கின்றோம். இதில் பிர­தான கட்­சிகள் எமக்கு இது­வரை கொடுத்த வாக்­கு­று­தி­களை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­து­கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்