முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணியின் புது­முக பந்­து­வீச்­சாளர் தசுன் சானக்­கவின் மிரட்டல் பந்­து வீச்சில் 171 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­டுக்­களை இழந்­தது இங்­கி­லாந்து.

இலங்கை மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட ரின் முத­லா­வது போட்­டி­நேற்று ஹெடிங்லி லீட்ஸ் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ், அலஸ்டர் குக் தலைமை­யி­லான இங்­கி­லாந்து அணியை முதலில் துடுப்பெ­டுத்­தா­டும்­படி பணித்தார்.

அதன்­படி இங்­கி­லாந்து அணியின் ஆரம்பத் துடுப் ­பாட்ட வீரர்­க­ளாக அணித் தலைவர் அலஸ்டர் குக் மற்றும் ஹெலஸ் ஆகி யோர் கள­மி­றங்­கினர்.

நிதா­ன­மாக ஆடி வந்த இந்த ஜோடி 20 ஓவர்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து 49 ஓட்­டங்­களைப் பெற்று ஆடிக்­கொண்­டி­ருந்த வேளையில், தசுன் சானக்க அலஸ்டர் குக்கை வீழ்த்தி ஆரம்பத் துடுப்­பாட்ட ஜோடியைப் பிரித்தார்.

16 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் குக் ஆட்­ட­மி­ழந்­தது ரசி­கர்­க­ளுக்கு பெரும் ஏமாற்­ற­மாக அமைந்­தது. டெஸ்ட் கிரிக்­கெட்டில் எந்­த­வொரு இங்­கி­லாந்து வீரரும் இது ­வ­ரையில் 10 ஆயிரம் ஓட்டங்­களைத் தொட்­ட­தில்லை.

இந்த மைல்­கல்லை எட்­டுவ­தற்கு அலஸ்டர் குக்­கிற்கு இன்னும் 36 ஓட்­டங்­கள்தான் தேவைப்­பட்­டி­ருந்­தன. இந்த ஏக்கம் இலங்கை அணிக்­கெ­தி­ரான முதல் டெஸ்டில் நிறை­வே­றப்­போ­கி­றது என்று பலரும் எதிர்­பார்த்­தனர். இவர் இது­வரை 9964 ஓட்­ட­ங்களைக் குவித்­துள்ளார். நேற்று 16 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­ததால் அந்த சாத­னையை நிறை­வேற்ற அவர் அடுத்த இன்னிங்ஸ் வரை காத்­தி­ருக்க வேண்டும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குக் ஆட்­ட­மி­ழந்­ததும் அடுத்­து­வந்த கெம்ப்டொன் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் தசுன் சானக்­கவின் பந்­து­வீச்சில் வெளி­யே­றினார். இவரைத் தொடர்ந்து கள­மி­றங்­கிய ரூட்டும் டக் அவுட் முறையில் ஆட்­ட­மி­ழக்க இங்­கி­லாந்து அணி 51 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்­தது.

அதன்­பி­றகு கள­மி­றங்­கிய வின்ஸ் (9), ஸ்ட்ரோக் (12) ஆட்­ட­மி­ழக்க, ஹெர்­லஸ்­ஸுடன் ஜோடி சேர்ந்தார் பெயார்ஸ்ட்டோ.

இந்த ஜோடி சற்று நிதா­ன­மாக ஆடி விக்­கெட்­டுக்­களை பாது­காத்து ஓட்­டங்­களைச் சேர்த்­தது.

இதில் ஹெர்லஸ் (71), பெயார்ஸ்ட்டோ (51) ஓட்­டங்­க­ளுடன் களத்தில் நிற்க மழை குறுக்­கிட்­டதால் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

பந்துவீச்சில் அசத்தி தசுன் சானக்க 1 ஓட்டத்தை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தி னார். எரங்க மற்றும் பிரதீப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.