66 பேருடன் மத்தியதரைக் கடலில் விழுந்த எகிப்திய பயணிகள் விமானம் (வீடியோ இணைப்பு)

Published By: Raam

20 May, 2016 | 08:27 AM
image

பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து எகிப்­திய கெய்ரோ நக­ருக்கு 66 பேருடன் பய­ணித்த எகிப்­து­எயார் விமா­ன­மொன்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­துள்­ள­தாக கிரேக்க பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

அந்த விமானம் ஆரம்­பத்தில் ராடர் கண்­கா­ணிப்பு கரு­வி­யி­லி­ருந்து காணா­மல் ­போ­யி­ருந்­தது.

மேற்­படி விமானம் கடலில் விழுந்­துள்­ளதை பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்ட் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேற்­படி விமானம் சடு­தி­யாக இடது பக்­க­மாக 90 பாகையும் வலது பக்­க­மாக 360 பாகையும் திரும்பி 37,000 அடி உய­ரத்­தி­லி­ருந்து வீழ்ந்­த­தாக கிரேக்க பாது­காப்பு அமைச்சர் பானொஸ் கம்­மெனொஸ் தெரி­வித்தார்.

ஆனால் அதன்­போது அந்த விமா­னத்­தி­லி­ருந்து உதவி கோரி அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என அவர் கூறினார்.

இந்­நி­லையில் இந்த விமானம் இவ்­வாறு விழுந்­துள்­ள­மைக்கு தீவி­ர­வாத தாக்­குதல் கார­ண­மாக இருக்கக் கூடும் என சந்­தே­கிப்­ப­தாக கிரேக்க அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தாக பிரித்­தா­னிய டெயி­லி­மெயில் ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பி.ஈ.ஏ. தேசிய விசா­ரணைப் பிரிவின் முன்னாள் தலைவர் ஜீன் போல் திரோ டெக் தெரி­விக்­கையில்,

அந்த விமானம் இவ்­வாறு எது­வித அவ­ச­ர­கால நிலைமை எச்­ச­ரிக்­கை­யு­மின்றி விழுந்­துள்­ளமை மோச­மான சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளதை எடுத்துக் காட்­டு­வ­தாக உள்­ளது என தெரி­வித் தார்.

மேற்­படி விமானம் எகிப்­திய நேரப்­படி அதி­காலை 2:30 மணி­ய­ளவில் கிரேக்க வான் பரப்பைக் கடந்­த­தும் ராடர் கரு­வி­யி­லி­ருந்து மறைந்­துள்­ளது.

மாய­மான அந்த எம்.எஸ்.804 விமா­னத்தில் சம்­பவம் இடம்­பெற்ற போது இரு குழந்­தைகள் மற்றும் ஒரு சிறுவன் உட்­பட 56 பய­ணி­களும் 7 விமான ஊழி­யர்­களும் 3 பாது காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் இருந்­தாக எகிப்­து­எயார் விமா­ன­சேவை நிறு­வனம் தெரி­விக்­கி­றது.

இந்­நி­லையில் காணா­மல்­போன விமா­னத்தைத் தேடும் நட­வ­டிக்­கையில் கிரேக்க மற்றும் எகிப்­திய ஆயுதப் படை­யினர் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். இந்தத் தேடுதல் நட­வ­டிக்­கைக்கு உதவும் முக­மாக பிரான்ஸ் பட­கு­க­ளையும் விமா­னங்­க­ளையும் அனுப்­பி­வைத்­துள்­ளது.

மேற்­படி விமா­னத்தில் 30 எகிப்­தி­யர்­களும் 15 பிரான்ஸ் பிர­ஜை­களும் 2 ஈராக்­கி­யர்­களும் பிரித்­தா­னியா, கனடா, பெல்­ஜியம், குவைத், சவூதி அரே­பியா, அல்­ஜீ­ரியா, சூடான், சாட் மற்றும் போத்­துக்கல் ஆகிய நாடு­களைச் சேர்ந்த தலா ஒரு­வரும் பய­ணித்­த­தாக எகிப்­து­எயார் நிறு­வனம் கூறு­கி­றது.

அந்த விமானம் பாரிஸின் சார்ள்ஸ் டி கோலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து அந்­நாட்டு நேரப்­படி புதன்­கி­ழமை இரவு 11:09 மணிக்குப் புறப்­பட்டு எகிப்­திய தலை­ந­கரை வியா­ழக்­கி­ழமை அதி­காலை 3:15 மணிக்கு சென்­ற­டைய இருந்த நிலை­யி­லேயே அது காணா­மல்­போ­யுள்­ளது.

ராடர் கரு­வி­யி­லி­ருந்து மறைந்த போது அந்த விமானம் எகிப்­திய வான் பரப்­புக்குள் பிர­வே­சித்து 37,000 அடி உய­ரத்தில் பறந்­து­கொண்­டி­ருந்­த­தாக எகிப்­து­எயார் நிறு­வனம் கூறு­கி­றது.

அந்த விமானம் காணா­மல்­போ­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்னர் விமா­னி­யுடன் விமானப் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்டு அதி­கா­ரிகள் உரை­யா­டி­யி­ருந்­த­தா­கவும் அதன்­போது விமா­னத்தில் பிரச்­சினை எதுவும் இருப்­ப­தாக விமானி தெரி­விக்­க­வில்லை எனவும் கிரேக்க விமான நிலைய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில் எகிப்­திய பிர­தமர் ஷெரீப் இஸ்­மாயில் கெய்ரோ விமான நிலை­யத்­துக்குச் சென்று அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உற­வி­ன­ர்களுடன் உரை­யா­டினார்.

இதன்­போது அந்த விமா­னத்­திற்கு என்ன நடந்­தி­ருக்கும் என்­பது தொடர்பில் பரவி வரும் ஊகங்கள் தொடர்பில் விமர்­சனம் எத­னையும் வெளி­யிட மறுத்த அவர், தற்­போது எத­னையும் கூற­மு­டி­யா­துள்­ள­தாக தெரி­வித்தார்.

அதே­ச­மயம் பாரிஸின் சார்ள்ஸ் டி கோலி விமான நிலை­யத்­துக்கு விஜயம் செய்த பிரான்ஸ் வெளி­நாட்டு அமைச்சர் ஜீன் மார்க் அரோல்ட், இந்த சம்­பவம் அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உற­வி­னர்­களைப் பொறுத்­த­வரை உணர்வு ரீதி­யான பதற்­ற­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேற்­படி விமான அனர்த்தம் தொடர்பில் எகிப்­திய மற்றும் பிரான்ஸ் ஜனா­தி­ப­திகள் ஒரு­வ­ருடன் ஒருவர் தொடர்­பு­கொண்டு உரை­யா­டி­ய­துடன் தத்­த­மது நாடு­களைச் சேர்ந்த சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் அவ­சர சந்­திப்பை மேற்­கொண்­டனர்.

கடந்த மார்ச் மாதம் எகிப்து எயார் விமா­ன­மொன்று கடத்தப்பட்டு திசை மாற்றப்பட்டது. பின்னர் அந்த விமானத் தைக் கடத்தியவர் சரணடைந்த துடன் அனைத்துப் பணயக்கைதிகளும் பாது காப்பாக மீட்கப்பட்டனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரஷ்ய விமானமொன்று எகிப்திய சினாய் தீபகற்பத்துக்கு மேலாக வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் அதில் பயணித்த 224 பேரும் கொல்லப்பட்டனர். மேற்படி விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியி ருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10