வழக்கு விசாரணையில் தலையீடு - நீதிமன்றத்தில் நீதிபதி தற்கொலை முயற்சி

Published By: Rajeeban

05 Oct, 2019 | 12:32 PM
image

வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நீதிபதியொருவர் நீதிமன்றத்தில் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தின் தென்பகுதி நகரான யாலவின் நீதிமன்றமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலைகுற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஐவரை ஆதாரம் இல்லை என தெரிவித்து விடுதலை செய்த பின்னர் கனகொர்ன் பியான்சனா என்ற நீதிபதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதேவேளை தற்கொலை முயற்சிக்கு முன்னர் குறிப்பிட்ட நீதிபதி சிரேஸ்ட நீதிபதிகள் தனது தீர்ப்பை மாற்றி ஐவரில் மூவருக்கு மரணதண்டனை வழங்குமாறு அழுத்தங்களை கொடுத்தனர் என குறிப்பிட்டார் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் பல நீதிமன்றங்களில் இது நடைபெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்,என்னால் நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை காப்பாற்ற முடியாமலுள்ளது நான் கௌரவமாக மரணிக்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தாய்லாந்தின் நீதித்துறை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது என்ற கரிசனைகள் அதிகரி;த்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13