நீதித்துறையின் சுயாதீனத்துக்கு தலை வணங்குகின்றோம் - பொதுஜன பெரமுனவினர்

Published By: Vishnu

04 Oct, 2019 | 08:51 PM
image

(எம்.மனோசித்ரா)

கோத்தாபய ராஜபக்ஷவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு நீதித்துறையை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இன்று தோல்வியடைச் செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டமைக்கு தலை வணங்குகின்றோம் என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஜெப்ரி தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிரான இந்த வழக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு கூட பொறுத்தமற்றது என்ற வகையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். 

உதய கம்பன்பில தெரிவிக்கையில், இன்றைய தீர்ப்பின் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோதபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதியாகியுள்ளது என்றார். 

கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், மிகவும் சாதாரணமான முறையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பிற்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார். 

டலஸ் அழகப் பெரும தெரிவிக்கையில், முழு நாடும் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுவே இறுதி தீர்ப்பு என்றார். 

மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில், நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்தாயிற்று என்றார். 

நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில், நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடுகள் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றார். 

சட்டத்தரணி மனோஜ் கமகே, இனி யாரும் கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை குறித்து கேள்வியெழுப்ப முடியாது. அவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த இருவராலும் நன்மையே கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். 

விமல் வீரவன்ச தெரிவிக்கையில், கோத்தாபய ராஜபக்ஷவுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதவர்கள் நீதித்துறையை பயன்படுத்தி அவரை வீழ்த்த நினைத்தார்கள். அவ்வாறானவர்களின் தோல்வி இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51