எல்கர், டீகொக் சதம் ; 385 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்கா

Published By: Vishnu

04 Oct, 2019 | 06:59 PM
image

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்க அணி 385 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. 

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதன் பின்னர் இரண்டாம் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 502 ஓட்டங்களை குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாரிக்க அணி அஸ்வின் - ஜடேஜா சுழற்பந்து வீச்சுக்கு திணறியது. 

ஆரம்ப வீரர் அல்டன் மார்க்ரம் 5 ஓட்டத்துடனும், ப்ரூய்ன் 4 ஓட்டத்துடனும் அஸ்வின் சுழலுக்கு இரையாகினர். அதன் பின்னர் களமிறங்கிய டேன் பீட், ஜடேஜா சுழலில் போல்ட் ஆனார். 

2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எல்கர் 27, பவுமா 2 ஓட்டங்களுடனும் இன்றைய தினம் 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். புவமா 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எல்கருடன் டூ பிளசிஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். 

எல்கர் சதமடிக்க டூ பிளசிஸ்சிஸ் 55 ஓட்டங்களில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டீகொக்குடன் ஜோடி சேர்ந்த எல்கர் 160 ஓட்டங்களை எடுத்தபோது ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஒருபுறம் டீகொக் தனது சதத்தை பதிவு செய்தார். 

பின்னர் டீகொக்கும் 111 ஓட்டம் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்க அணி 385 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

முத்துசாமி 12, கேசவ் மகாராஜ் 3 ஓட்டடங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35