கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை

Published By: Priyatharshan

04 Oct, 2019 | 02:43 PM
image

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதிகள் 3 பேரடங்கிய குழாம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விசாரணையை நிறைவுசெய்வதற்காக அனைத்து தரப்பினர்களது சமர்ப்பணங்களையும் சமர்ப்பிக்க மாலை 3.15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்குட்படுத்தி மனுத்தாக்கலை பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வெயங்கொட ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குமாறு 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டபூர்வமற்றது அல்லது போலியானது எனத் தெரிவித்தே குறித்த இருவரும் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று 3 ஆவது நாளாகவும் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58