மஹிந்த தரப்பின் மாயா­ஜால அர­சி­ய­லுக்கு மயங்­காது பகுத்­த­றிந்து முடி­வெ­டுக்­க­வேண்டும் - வேலு­குமார்

Published By: Daya

04 Oct, 2019 | 11:20 AM
image

ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச வெற்­றி­பெ­றுவார் என்­பது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக சேறு­பூசும் நட­வ­டிக்­கையில் மஹிந்­தவும் அவரின் சகாக்­களும் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மஹிந்த தரப்பின் மாயா­ஜால அர­சி­ய­லுக்கு மயங்­காமல் பகுத்­த­றிந்து முடி­வு­களை எடுக்க வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதித் தலை­வரும், இந்து சமய விவ­கார அமைச்சின் கண்­கா­ணிப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வேலு­குமார் தெரி­வித்தார்.

ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் கண்டி மாவட்ட அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் கொழும்பில் நேற்று நடை­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்டம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டலில் பேசுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

தேர்தல் வந்­து­விட்­டால்­போதும். மஹிந்­த­வுக்கும் அவரை சூழ­வுள்­ள­வர்­க­ளுக்கும் ‘இன­வாத’ காய்ச்சல் தொற்­றிக்­கொள்­கின்­றது. இது­வரை காலமும் இன­வா­தி­க­ளுக்கு பாலூட்டி அவர்­களை மறை­மு­க­மாக இயக்­கிய கோத்தபாய ராஜ­பக்­ ஷவும் தற்­போது அந்த அணியில் இணைந்து அர­சி­ய­லுக்கு வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு மட்­டுமே தேசப்­பற்று இருப்­ப­தாக எண்ணி கூவித்­ தி­ரி­கின்­றனர்.

மக்கள் மத்­தியில் தற்­போது நேர்­வழியில் பிர­சாரம் செய்­ய­மு­டி­யாத அள­வுக்கு தமது ஆட்­சி­யின்­போது பல சகிக்­க­மு­டி­யாத சம்­ப­வங்­களை அரங்­கேற்­றிய ராஜ­பக் ஷக்­களும் அவர்­களின் சகாக்­களும் வேறு வழி­யின்­றியே வழ­மைபோல் இன­வாத ஆயு­தத்தை கையி­லெ­டுத்­துள்­ளனர். தேசப்­பற்றை முன்­னி­லைப்­ப­டுத்தி கறை­ப­டிந்த தமது கடந்­த­கால பய­ணத்தை மூடி­ம­றைக்க முற்­ப­டு­கின்­றனர். சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் எங்­க­ளுக்கும் ராஜ­பக்­ ஷக்­க­ளை­விட  நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்­து­ம­டி­ய­போகும் தாய்­நா­டு­மீது அதிக பற்று இருக்­கின்­றது.

ஆனால், அர­சி­ய­லுக்­காக ஒரு­போதும் தாய்­நா­டு ­மீ­தான பற்றை அட­கு­வைத்து வாக்­கு­வேட்டை நடத்­தி­யது கிடை­யாது. உணர்­வுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களை சந்­தைப்­ப­டுத்த முற்­ப­டு­பவன் உண்­மை­யான தேசப்­பற்­றாளன் கிடை­யாது என்­பது தற்­போது மக்­க­ளுக்கும் புரிந்­து­விட்­டது. பாரம்­ப­ரிய அர­சி­ய­லுக்கு அப்பால் நவ­யு­கத்­துடன் ஒப்­பிட்டு சிந்­தித்து முடி­வெ­டுக்­க­கூ­டிய வல்­லமை சஜித்­துக்கு இருக்­கின்­றது. இத­னால்தான் அவரின் கரங்­களை பலப்­ப­டுத்த நாம் ஆத­ரவு வழங்­கி­யுள்ளோம். சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றிக்­காக நாம் அனை­வரும் தீவி­ர­மாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

அவரின் வெற்­றி­யில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன். எனவே, மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் உண்மை எது, பிழை எது என்பதை பகுத்தறிந்து முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01